ராமர் ஒரு நேபாளி என நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி தெரிவித்தது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அயோத்தியில் மீண்டும் அகழாய்வு செய்ய வேண்டும் என உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி மாவட்ட மாஜிஸ்திரேட் அலுவலகம் முன்பாக புத்தத் துறவிகள் ஜூலை15ஆம் தேதி போராட்டம் நடத்தினர்.
அப்போது, ராமர் கோயில் கட்டுவதற்காக நிலத்தைத் தோண்டும்போது கண்டெடுக்கப்பட்ட பழங்காலப் பொருள்களை பொதுப்பார்வைக்கு வைக்க வேண்டும் என்றும், ராம ஜென்மபூமி என சொல்லப்படும் இடத்தை யுனெஸ்கோ மீண்டும் அகழாய்வு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.
மேலும், அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் இடத்தில் புத்த மதம் இருந்ததற்கான தடயங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதால், ராமர் கோயில் கட்டும் பணியை நிறுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
இது குறித்து போராட்டம் நடத்திய புத்தத் துறவி ஆஷாத் பவுத் கூறுகையில், ’எங்கள் தடயங்களை குடியரசுத் தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளோம்’ என்றார்.
இதையும் படிங்க...இந்திய-ஐரோப்பிய உச்சி மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடி!