ETV Bharat / bharat

ஆண்டுக்கு ரூ.10 லட்சம் மேல் வருவாய் ஈட்டும் பி.டெக் முடித்த ஹை-டெக் விவசாயி...!

லக்னோ: பி.டெக் படித்து முடித்துவிட்டு விவசாயம் செய்ய எண்ணிய வாரணாசி இளைஞர் ஒருவர் வருடத்திற்கு 10 முதல் 11 லட்சம் ரூபாய்வரை வருவாய் ஈட்டுவது மட்டுமல்லாமல் பலருக்கு வேலைவாய்ப்பையும் வழங்கிவருகிறார்.

btech-pass-youth-in-varanasi-is-earning-millions-by-farming

author img

By

Published : Sep 18, 2020, 2:44 PM IST

ஹைடெக் விவசாயி ஓர் அறிமுகம்

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியை அடுத்த தண்டிப்பூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் பிரதீப் பட்டேல். இவர் அந்த கிராமத்தில் மட்டுமல்ல மாவட்டத்திலேயே ஹை-டெக் விவசாயி என அறியப்படுகிறார். படிப்பில் மிகுந்த ஆர்வம் உடைய இவர் பி.டெக் படித்துவிட்டு இரண்டு வருடம் பல்வேறு நிறுவனங்களில் இரண்டு வருடம் பணிபுரிந்தார். சில நிறுவனங்கள் நாள் முழுவதும் தனது உழைப்பை சுரண்டிவிட்டு குறைந்த ஊதியம் அளிப்பதை எண்ணி கவலையடைந்தார்.

விவசாயத்திற்குள் நுழைந்த பட்டேல்

இதற்கிடையில் மற்றவர்களுக்கு பயன்படும் பொருட்டு ஏதேனும் வித்யாசமாக செய்யவேண்டும் என்ற எண்ணம் அவரை துரத்திக்கொண்டே சென்றது. இதனால் தான் செய்துவந்த வேலையைத் துறந்துவிட்டு தனது சொந்த கிராமத்திற்கு திரும்பி விவசாயத்திற்குள் மூழ்கினார்.

ஆரம்பத்தில் பல சிக்கல்களை சந்தித்த அவர், குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு மற்றும் நம்பிக்கையால் மெல்ல மெல்ல முன்னேற்றம் கண்டார். தற்போது, அவர் கத்தரிக்காய், உருளைக் கிழங்கு, வெண்டைக்காய், வெள்ளரிக்காய், பாகற்காய், கேரட் உள்ளிட்ட காய்கறிகளை சாகுபடி செய்துவருகிறார்.

இருப்பினும், மாநில விவசாயத்தில் புதுமையை புகுத்த வேண்டும் என்ற எண்ணம் மீண்டும் மீண்டும் அவரது சிந்தனையை தூண்டிக்கொண்டே இருந்தது.

சொட்டு நீர் பாசனப் பயன்பாடு

இதையடுத்து, குறைவான பூச்சிக்கொல்லி மருந்து மற்றும் ரசாயன பயன்பாடு ஆகியவற்றைப் பயன்படுத்தி தக்காளி, வெள்ளரிக்காய், குடை மிளகாய், முட்டைக்கோஸ் பயிரிடலாம் என்ற முடிவு செய்தார். இதற்காக சொட்டு நீர் பாதன முறையை பயன்படுத்தவும் எண்ணினார். விளைவு, விவசாயத்திற்காக பயன்படுத்தப்படும் நீரை சேமித்தது மட்டுமின்றி சந்தையில் விற்கப்படும் காய்கறிகளிலேயே சிறந்த மற்றும் அதிக விலைக்கு எடுத்துக்கொள்ளப்படும் விவசாய பொருள்களாகவும் அவை மாறியது.

வேலைவாய்ப்பு

இதுபோன்ற முயற்சிகளில் ஈடுபடும்போது, தனிநபராய் அனைத்தையும் கையாள முடியாது என்ற எண்ணம் தோன்றியவுடன், கிராமத்தில் ஏழ்மையிலுள்ள மக்களை விவசாயத்திற்கு பயன்படுத்தினார். பயிர்களுக்கு பூச்சி உள்ளிட்ட மற்றவைகளிடமிருந்து நல்ல பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.

அதிக வருவாய்

விவசாயம் மூலம் அதிகளவு வருவாய் ஈட்ட முடியும் எனத் தெரிவித்த பட்டேல், தற்போது ஆண்டிற்கு 10 முதல் 11 லட்ச ரூபாய் வரை வருவாய் ஈட்டுவதாகக் கூறி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். அரசு விவசாயிகளுக்கு அறிவித்துள்ள திட்டங்களைப் பயன்படுத்தி விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர்கள் தனியார் நிறுவனங்களிடம் குறைந்த ஊதியத்தில் அதிக உழைப்பை அளிப்பதற்கு பதிலாக விவசாயத்தை மேம்படுத்தலாம்.

அதுமட்டுமின்றி, படித்த மக்கள் விவசாயத்தைக் கையிலெடுத்தால் அவர்கள் அரசாங்கத்தின் திட்டங்களுக்கு ஏற்பவும், மண்ணின் தன்மையை உணர்ந்தும் நல்ல விளைச்சலை கொடுக்க முடியும் எனவும், வருடத்திற்கு லட்சக் கணக்கில் வருவாய் ஈட்டலாம் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.