ETV Bharat / bharat

'புதுச்சேரியில் மதுக்கடை திறப்பிற்கு ஸ்டாலினின் நிலைப்பாடு என்ன?'- அதிமுக எம்.எல்.ஏ கேள்வி! - கறுப்பு பலூன் பறக்கவிட்டு போராட்டம் நடத்திய எம்.எல்.ஏ

புதுச்சேரி: புதுச்சேரியில் இன்று முதல் அனைத்து மதுபானக் கடைகளும் திறக்கப்பட்டதைக் கண்டித்து அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் வையாபுரி மணிகண்டன் கறுப்பு பலூனைப் பறக்கவிட்டு போராட்டம் நடத்தினார்.

கருப்பு பலூன் ஏந்திய படி போராட்டத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ. வையாபுரி மணிகண்டன்

author img

By

Published : May 25, 2020, 9:11 PM IST

அப்போராட்டத்தில் வையாபுரி மணிகண்டன் கூறியதாவது, 'தமிழ்நாட்டில் மதுபானக் கடைகளைத் திறந்தபோது திமுக தலைவர் ஸ்டாலின் கறுப்பு சட்டை அணிந்து போராட்டம் நடத்தினார். இந்நிலையில் திமுகவின் கூட்டணி தயவால் காங்கிரஸ் ஆட்சி நடத்தும் புதுவையில் மதுபானக் கடைகளைத் திறப்பதில் திமுகவின் நிலைபாடு என்ன என்று ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பி இருந்தோம். ஆனால், இதுவரை எந்தப் பதிலும் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில் இன்று புதுவையில் மதுபானக் கடைகளை, திமுக துணையோடு ஆட்சி நடத்தும் காங்கிரஸ் அரசு திறந்துள்ளது. இது பற்றி திமுக தலைவர் எந்த கருத்தும் தெரிவிக்காமல், மௌனமாக இருந்து வருகிறார். திமுக கூட்டணி கொள்கைக்கு விரோதமாகச் செயல்படும் காங்கிரஸ் அரசை கண்டித்து, தற்போது அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவாரா?; இதன்மூலம் இரட்டை வேடம் போட்டு மக்களை ஏமாற்ற நினைத்த திமுகவின் முகத்திரை கிழிந்துள்ளது.

திமுக, தலைவரின் மௌனம் புதுவையில் காற்றில் பறக்கிறது. இதை வெளிக்காட்டும் வகையில் இப்போராட்டம் நடத்தப்படுகிறது' எனக் கூறி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வையாபுரி மணிகண்டன் கறுப்பு பலூன்களை காற்றில் பறக்கவிட்டு, அதிமுக சார்பில் முத்தியால்பேட்டை பகுதியில் போராட்டம் நடத்தினார்.

போராட்டத்தில் அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டு தகுந்த இடைவெளி கடைப்பிடித்து பலூன்களைப் பறக்கவிட்டனர்.

இதையும் படிங்க: 'ஆரம்ப சுகாதார நிலையங்களில் கரோனா தொற்றாளர்களுக்கு தனிப்பாதை'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.