புதுச்சேரி மாநிலத்தை தமிழ்நாட்டுடன் இணைக்க பாஜக முயற்சி செய்து வருவதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி இரு தினங்களுக்கு முன்பு மேடை ஒன்றில் பேசியபோது சொல்லியிருந்தார்.
இதனைக் கண்டித்து புதுச்சேரியில் பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன் தலைமையில் கண்டனப் பேரணி நடைப்பெற்றது. இதனையடுத்து இன்று (அக்.10) காரைக்காலுக்கு நீதிமன்ற வளாகம் திறப்பதற்காக வந்த முதலமைச்சர் நாராயணசாமிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், காரைக்கால் மாதாகோவில் வீதியில் உள்ள விநாயகர் கோயில் முன்பு, பாஜகவினர் சூடம் ஏற்றி, தேங்காய் உடைத்து முதலமைச்சர் நாராயணசாமிக்கு விநாயகர் நல்ல புத்தியை கொடுக்க வேண்டும் என வழிப்பட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இதையும் படிங்க: 10ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது!