ETV Bharat / bharat

பஞ்சாப் மக்கள் போராட்டமே பாஜக, சிரோமணி கூட்டணி முறிவுக்கு காரணம்: சுனில் ஜாகர் - வேளாண் சட்டமுன்வடிவுகள்

சண்டிகர் : மத்திய அரசின் வேளாண் சட்ட முன்வடிவுகளுக்கு எதிராக தீவிரமடைந்துள்ள போராட்டம் காரணமாகவே பாஜக கூட்டணியில் சிரோமணி அகாலி தளம் வெளியேறியதாக அம்மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் சுனில் ஜாகர் கருத்து தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் மக்கள் போராட்டமே பாஜக, சிரோமணி கூட்டணி முறிவுக்கு காரணம் : சுனில் ஜாகர்

author img

By

Published : Sep 28, 2020, 7:22 PM IST

நாடாளுமன்ற மழைக்கூட்டத்தொடரில் காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், திமுக, சிபிஐ, சிபிஐ(எம்) உள்ளிட்ட 18 எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்பை மீறி மத்திய அரசு வேளாண் தொடர்பான 4 சட்ட முன்வடிவுகளை நிறைவேற்றி உள்ளது.

இந்த சட்ட முன்வடிவுகளை எதிர்த்து நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் இயக்கங்கள், எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்துவருகின்றன.

இந்நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில்( என்டிஏ) நெடுங்காலமாக அங்கம் வகித்துவந்த சிரோமணி அகாலி தளம் கட்சி அதிலிருந்து வெளியேறுவதாக நேற்று அறிவித்துள்ளது.

இது தொடர்பாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய பஞ்சாப் காங்கிரஸ் கமிட்டி மாநிலத் தலைவர் சுனில் ஜாகர், "பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியில் 20 ஆண்டுகளுக்கு மேலாக அங்கம் வகித்துவந்த சிரோமணி அகாலி தளம் கட்சி நாடு முழுவதும் நடைபெற்றுவரும் மக்களின் போராட்டங்களைக் கண்டு அஞ்சுகிறது.

பாஜக கூட்டணியில் தொடர்ந்தால் பாஞ்சாபில் அரசியல் அநாதையாகிவிடுவோம் என்ற பயத்தில் தற்போது அந்த கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.

கூட்டணி தொடர்பாக சிரோமணி அகாலிதளம் கட்சிக்குள்ளேயே ஏற்பட்டுள்ள இருவேறு கருத்துகள் அக்கட்சியை பிளவுப்படுத்துவதைத் தவிர்க்கவே அதன் மையக் குழுவானது பாஜகவுடனான உறவை முறித்துக் கொள்ள வைத்துள்ளது.

உண்மையில், அகாலி தளம் பாஜகவுடனான தனது உறவை முறித்துக்கொள்ள விரும்பவில்லை. கடைசிவரை அந்த கூட்டணியை தக்கவைக்க ஆர்வமாக இருந்தது.

சட்ட முன்வடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கௌர் பாதல் மத்திய அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்தபோது பிரதமரோ, பாஜகவின் தலைவர்களோ அவருடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்த முயற்சிக்கவில்லை.

இந்த முறிவின் தொடக்கக்காரர்களாக சிரோமணி அகாலிகள் ஒருபோதும் கருதப்பட தேவையில், பாஜகவின் அவமதிப்பும், நிராகரிப்புமே இந்த கூட்டணி முறிவுக்கு காரணம்.

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த மூன்று கோடி விவசாயிகள் தொடர் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். இனியும் கூட்டணியில் தொடர்ந்தால் தங்களது அரசியல் வாழ்வு முழுமையாக சூனியமாகிவிடும் என்பதை உணர்ந்து கூட்டணியை விட்டு வெளியேறினர். இதை தவிர, அகாலிகளுக்கு வேறு வழியில்லை என்ற நிலையில்தான் இந்த கூட்டணி முறிவு உறுதியானது" என தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.