ETV Bharat / bharat

”மிர்சாபூர் தவறாக சித்தரிக்கப்படுகிறது” - வெப் சீரிஸுக்கு பாஜக எம்பி எதிர்ப்பு! - மிர்சாபூர் வெப்சீரிஸ்

லக்னோ : மிர்சாபூர் இரண்டாம் பாகம் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள நிலையில், அதில் உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஒரு மாவட்டம் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக பாஜக எம்பி குற்றம் சாட்டியுள்ளார்.

BJP MP
BJP MP
author img

By

Published : Oct 24, 2020, 7:42 PM IST

அலி ஃபைசல், பங்கஜ் திரிப்பாதி, திவ்யான்டு ஷர்மா ஆகியோரின் நடிப்பில் கரண் அன்சுமான், குர்மித் சிங் ஆகியோரின் இயக்கத்தில் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகி பெரும் வெற்றிபெற்ற வெப்சீரிஸ் மிர்சாபூர். இதன் இரண்டாவது பாகம் கடந்த அக்டோபர் 23ஆம் தேதி வெளியான நிலையில், வெப் சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் இதற்கும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில், மிர்சாபூர் மாவட்டம் வன்முறைக்குள்ளான பகுதியாக இந்த சீரிஸில் தொடர்ந்து தவறாக சித்தரிக்கப்பட்டு வருவதாக பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் அனுப்பிரியா பட்டேல் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், பிரதமர் மோடி, உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் இது குறித்து விசாரணை மேற்கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "பிரதமர் மோடியின் தலைமையில் மிர்சாபூர் மாவட்டம் இயங்கி வருகிறது. நல்லிணக்கத்தின் மையமாக விளங்கும் இந்த மாவட்டம் குறித்து, ’மிர்சாபூர்’ என்ற வெப்சீரிஸில் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது. மேலும், சமூகப் பிரிவினருக்கு இடையே வன்முறையைத் தூண்டும் விதமாக இது எடுக்கப்பட்டுள்ளது.

மிர்சாபூர் மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் நான், இது குறித்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.