ETV Bharat / bharat

ராகுல், பிரியங்காவை ராவணன், சூர்ப்பனகையுடன் ஒப்பிட்ட பாஜக பிரமுகர் - சூர்பனகை

ஜெய்பூர்: பாஜக மூத்த தலைவர் கியான் தேவ் அஹுஜா காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியையும் பிரியங்கா காந்தியையும் ராவணன், சூர்ப்பனகையுடன் ஒப்பிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராகுல், பிரியங்காவை ராவணன், சூர்ப்பனகையுடன் ஒப்பிட்ட பாஜக பிரமுகர்
author img

By

Published : Mar 27, 2019, 9:34 PM IST

பாஜக சார்பில் ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் மக்களவைத் தேர்தலையொட்டி பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. அதில் பேசிய ராஜஸ்தான் மாநில பாஜக துணைத் தலைவர் கியான் தேவ் அஹுஜா, சத்யுக யுகத்தில் அரக்க இனத்தைச் சேர்ந்த இரணியன் சிக்கலில் மாட்டிக்கொண்டபோது தன் தங்கையான ஒலிகாவின் உதவியை நாடியதாகவும், திரேத்தா யுகத்தில் அரக்க இணத்தைச் சேர்ந்த ராவணன் பிரச்னையில் சிக்கிக் கொண்டபோது தன் தங்கையான சூர்ப்பனகையின் உதவியை நாடியதாகவும் சுட்டிக்காட்டி பேசினார்.

அதேபோல் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் பிரச்னையில் சிக்கிக் கொண்டதால் தன் தங்கையான பிரியங்கா காந்தியை நாடியுள்ளதாக விமர்சித்துள்ளார். மேலும், நாத்திகர்களான ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் பிரதமர் மோடியால்தான் கோயிலுக்கு செல்வதாகவும், அரசியலுக்காக பொய் பரப்புரையில் காங்கிரஸ் ஈடுபடுவதாகவும் குற்றம்சாட்டினார்.

25 தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தானில் இரு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.