புதுச்சேரியில் கரோனா காலத்தில் கடந்த ஐந்து மாதங்களாக மின்கட்டணம் பில் கணக்கெடுக்கப்படாமல் இருந்துவந்தது. இதற்கிடையே கடந்த மாதம் முதல் மின்கட்டணம் ரசீது வீடுகளுக்கு அனுப்பப்பட்டது. இதில் நிர்வாகம் கட்டணங்களை உயர்த்தியுள்ளது. இந்தக் குளறுபடிகளுக்கு அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில், புதுச்சேரியில் மின் கட்டண உயர்வைக் கண்டித்து இன்று (செப்.29) பாரதிய ஜனதா கட்சியின் தலைவரும்,சட்டப்பேரவை உறுப்பினருமான சாமிநாதன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் புதுச்சேரி லாசுபேட்டை மின்துறை அலுவலகம் அருகே நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மின்கட்டண உயர்வு, மின்கட்டண கணக்கிடலில் குளறுபடியைக் கண்டித்து 100-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளைவலியுறுத்தினர்.
இதையும் படிங்க: அதிமுக செயற்குழு கூட்டத்தில் வாக்குவாதம் நடக்கவில்லை - அமைச்சர் ஜெயக்குமார்