சமாஜ்வாதி கட்சியின் தலைமையகத்தில் அக்கட்சி சார்பாக நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் முன்னாள் உத்தரப் பிரதேச முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், "தன்னாட்சி நிறுவனங்களை எப்படி கட்டுப்படுத்துவது என்பதை குறித்து பாஜகவிடம் கற்றுக்கொள்ள வேண்டும். இதுபோல், எந்த அரசும் செய்ததில்லை. அமலாக்கத் துறை, சிபிஐ, அச்ச உணர்வு ஆகியவைதான் புதிய ஜனநாயகம்.
ஜனநாயகத்திற்கு பாஜக புதிய அர்த்தத்தை தந்துள்ளது. அமலாக்கத் துறை, வருமானவரித் துறை ஆகியவற்றை பயன்படுத்தி அச்ச உணர்வை பாஜக உருவாக்குகிறது. வங்கிகளின் நிலைமை மோசமாக உள்ளதால், நாட்டில் முதலீடு குறைந்துள்ளது. வன்முறை சம்பவங்கள், மத கலவரங்கள் அதிகரித்துள்ளன" என்றார்.