பிகார் சட்டப்பேரவையில் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராக இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக, எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் ஒத்திவைப்பு தீர்மானத்தை கொண்டுவந்தார்.
இது தொடர்பாக பேசிய மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார், “தேசிய குடிமக்கள் பதிவேட்டை பிகாரில் செயல்படுத்தக்கூடாது. இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. இதுமட்டுமின்றி தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பாக மக்களிடையே குழப்பங்கள் உள்ளன.
தாய்-தந்தையரின் பெயர், ஆவண விவகாரத்தில் சர்ச்சை எழுகிறது. இதுபற்றி தெளிவுப்படுத்தும்படி மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது” என்றார்.
பிரதமர் நரேந்திர மோடியின் தீர்க்கமான என்பிஆர், என்ஆர்சிக்கு ஆதரவு அறிக்கையை மீறி, நிதிஷ் குமார் தனது எதிர்ப்பை பதிவு செய்யுள்ளார். நிதிஷ் குமார் தலைமையிலான பிகார் அரசில், பாஜக அங்கம் வகிக்கிறது என்பது நினைவுகூரத்தக்கது.
இதையும் படிங்க: மோடி இருக்கும்வரை இந்தியா - பாக் உறவில் முன்னேற்றம் இருக்காது - அப்ரிடி