மத்தியப் பிரதேச மாநிலம் போபாலைச் சேர்ந்த காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் குணால் சௌத்ரிக்கு இன்று (ஜூன் 13) கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதுவரை மத்தியப் பிரதேச மாநிலத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 440 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதேசமயம் நேற்றைய (ஜூன் 12) நிலவரப்படி, 10,443 பேர் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 70 பேர் போபாலைச் சேர்ந்தவர்கள் என மாநில சுகாதாரத் துறை தெரிவித்திருந்தது. கடந்த ஜூன் 1ஆம் தேதியிலிருந்து ஊரடங்கு உத்தரவில் தளர்வுகள் அளிக்கப்பட்டன. அதிலிருந்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,354ஆக அதிகரித்துள்ள நிலையில், இறந்தவர்களின் எண்ணிக்கை 90ஆக உயர்ந்துள்ளது.
கரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால் மத்தியப் பிரதேச மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் தலைமையிலான அரசு, அதிகம் பாதிக்கப்பட்ட போபால் பகுதியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கவுள்ளார்.