மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா நகரில் உள்ள கரியா பகுதியில் உள்ள சுடுகாட்டில் கடந்த வாரம் கொல்கத்தா மாநகராட்சி வேனில் கொண்டு வரப்பட்ட அழுகிய நிலையில் இருந்த 14 பிரேத உடல்களுக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அந்த உடல்கள் கரோனா தொற்று பாதிப்பால் உயிரிழக்கவில்லை என்று கூறப்படுகிறது.
மேலும் அப்பகுதியினர் அந்த உடல்களை தகனம் செய்ய எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். இந்த காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. கொல்கத்தாவில் நடந்த இந்தச் சம்பவத்திற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பி, விமர்சனத்திற்கு உள்ளாகியது.
இந்நிலையில், மேற்கு வங்க அரசின் சுகாதாரத்துறை உயிரிழந்த பிரதே உடல்களுக்கு கரோனா பரிசோதனை செய்யக்கூடாது எனத் தெரிவித்துள்ளது.
இவ்விவகாரத்தில் கரோனா பரிசோதனை வழிமுறைகளைக் கடுமையாகப் பின்பற்றுவது குறித்து நடவடிக்கை எடுப்பதோடு, சுகாதாரத்துறைக்கு சுற்றறிக்கை அனுப்பப்படும் என்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரும் இந்திய மருத்துவர் சங்கத்தின் தலைவருமான சாந்தனு சென் கூறினார்.
இதையும் படிங்க: கோவிட்-19: ஒரே நாளில் இந்தியாவில் 10,667 பேருக்கு கரோனா