ETV Bharat / bharat

அயோத்தி ராமர் கோயில் கட்டுமானப் பணிகளில் தொய்வு! - அயோத்தி எம்.பி. லுல்லு சிங்

அயோத்தி: அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக அத்தொகுதி எம்.பி. கூறினார்.

அயோத்தி ராமர் கோயில் கட்டுமானப் பணிகளில் தொய்வு! ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் அயோத்தி எம்.பி. லுல்லு சிங் Ayodhya Ram Temple construction set to be delayed, says BJP MP

author img

By

Published : Mar 27, 2020, 12:13 AM IST

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் தொடங்கி நடந்தது. தற்போது பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக அத்தொகுதி எம்.பி. லல்லு சிங் கூறினார். இது குறித்து ஈடிவி பாரத்திடம் அவர் பேசுகையில், “கரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் பல மாதங்கள் தாமதம் ஆகலாம். எனினும் தொழிலாளர்களுக்கு முழு சம்பளம் அளிக்கப்படும். மேலும் ராமர் கோயில் தவிர, கடந்த 28 ஆண்டுகளாக மூடப்பட்டு பாழடைந்த நிலையில் உள்ள மனஸ் பவனிலும் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

முன்னதாக நேற்று அயோத்தியில் உள்ள ராம் லல்லா சிலை தற்காலிக புதிய இடத்திற்கு மாற்றப்பட்டது. உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்ட விழாவில், கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நடைமுறைகள் பின்பற்றப்படாததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனால் எதிர்க்கட்சிகளின் கடுமையான கண்டன குரலுக்கு ஆளானார். ராமர் சிலை புதிய கட்டமைப்பில் 9.5 கிலோ வெள்ளி சிம்மாசனத்தில் வைக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தால் ஒதுக்கப்பட்ட இடத்தில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் நிறைவடையும் சிலை அதே இடத்தில் இருக்கும்.

இதையும் படிங்க: கரோனா வைரஸுக்காக ஒடிசாவில் தயாராகும் பிரத்யேக மருத்துவமனை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.