ETV Bharat / bharat

ஆட்டோ ஓட்டுநரின் சமயோஜிதம்: உயிர் பிழைத்த தாயும் சேயும் - கர்பிணி பிரசவம்

ஜெய்பூர்: பிரசவத்திற்காக ஆட்டோவில் பயணம் செய்த கர்ப்பிணியை தனது சமயோஜித புத்தியால் காப்பாற்றிய ராஜஸ்தான் ஓட்டுநரை அப்பகுதி மக்கள் நெகிழ்ச்சியுடன் பாராட்டிவருகின்றனர்.

baby
baby
author img

By

Published : Feb 14, 2020, 6:51 PM IST

ராஜஸ்தான் மாநிலம் கோட்ட மாவட்டத்தைச் சேர்ந்த சுனில் மேவாரின் மனைவி பூஜா மேவார் பிரசவத்திற்காக அருகிலுள்ள மருத்தவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

அருகில் உள்ள ஈ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே, இவருக்கு கடுமையான பிரசவ வலி வந்துள்ளது. மனைவி வலியால் துடிக்க நிலைமை மோசமடையவே கணவர் சுனில் செய்வதறியாது திகைத்துள்ளார். சமயோஜிதமாக யோசித்த ஆட்டோ ஓட்டுநர் இப்ராஹிம், வண்டியை நிறுத்தி அருகே உள்ள பெண்களை உதவிக்காக அழைத்துக்கொண்டார்.

இதையடுத்து பூஜாவுக்கு அங்கேயே பிரசவம் பார்க்கப்பட்டு, அவருக்கு பெண் குழந்தையும் பிறந்தது. அதன் பின்னர், தாயையும் சேயையும் சுனில் உடனடியாக மருத்துவமணையில் கொண்டு சேர்த்துள்ளார்.

இப்ராஹிமின் இந்த செயலுக்கு அப்பகுதி மக்கள் நெகிழ்ச்சிப்பூர்வமான நன்றியை தெரிவித்துள்ளனர். கோட்டா ஆட்டோ சங்கம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளது.

எனது மனைவியும், குழந்தையும் காப்பாற்றிய இப்ராஹிமுக்கு நன்றி என பூஜாவின் கணவர் சுனில் நன்றி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: காதலர் தினத்தில் உதயமான காதல் - க்யூட் காணொலி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.