கரோனாவை எதிர்த்து போராடுவது மற்றொரு உலகப்போர். முடிவுறா போர்க்களத்தில் கண்ணுக்கு தெரியாத எதிகரிகளை எதிர்த்து மனித இனம் உறுதியுடன் போராடும் போர் இது. சர்வதேச அளவில் கரோனா தடுப்புக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தியா தன் சக்திக்கு இயன்ற அளவு குடிமக்கள் போர் வீரர்கள் போல் திரட்டி போராடி வருகிறது.
கடந்த நூற்றாண்டில் நாம் கேட்டிடாத மிகப் பெரிய போர் இது! உலக சுகாதார மையம், கோவிட் 19-ஐ பெருந்தொற்று என அறிவித்து 10 நாட்கள் கடந்த நிலையில், 114 நாடுகளில் இத்தொற்றால் 4,291 பேர் உயிரிழந்தனர், 1,84,000 பாதிக்கப்பட்டிருந்தனர். தற்போது 180 நாடுகளுக்கு பரவியுள்ள இத்தொற்றால் 3 லட்சத்துக்கும் அதிகமான நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், 13, 700 நபர்கள் உயிரிழந்தனர்.
உலகமயமாதல் இந்தப் பரந்த உலகை ஒரு கிராமம் போல் மாற்றியுள்ளது. எல்லை கடந்து, நினைத்து பார்க்க முடியாத அளவு விரிந்திருக்கும் விமான சேவையால் இத்தொற்று 5 முக்கிய சுற்றுலா நாடுகளுக்கு சென்ற சுற்றுலா பயணிகளை பாதித்திருப்பது இந்தியாவுக்கும் பாதகமாக அமைந்துள்ளது.
ஆரம்பமாக சீனாவின் வூகானில் பரவிய இத்தொற்றுக்கு அந்நாடு பெரும் விலை கொடுத்திருக்கிறது. தற்போது சீனா வெற்றிகரமாக கரோனா பரவலை தடுத்துள்ளது. தென்கொரியா, ஜெர்மனி போன்ற நாடுகள் பெய்ஜிங்கிடமிருந்து கற்றுக்கொண்டு கரோனா தடுப்பு நடவடிக்கையை சரிவர செய்து வருகின்றன. இத்தாலி நாடு கவனக்குறைவால் பேரிழப்பை சந்தித்திருக்கிறது.
அமெரிக்கா, பிரிட்டன் எல்லாம் பதற்றமான நிலையில் உள்ளபோது, இந்தியா கரோனாவின் இரண்டாம் நிலையில் அதை தடுப்பதற்கான அத்தனை நடவடிக்கைகளையும் விரைவாக செயல்படுத்தி வருகிறது. மக்கள் சுய ஊரடங்கால் 11,000-க்கும் அதிகமான பயணிகள் ரயில் மற்றும் பேருந்துகள் இந்த மாத இறுதிவரை நிறுத்தப்பட்டன. தெலங்கானா, ஆந்திரா போன்ற மாநிலங்கள் தங்கள் எல்லைகளை மூடியுள்ளன.
தற்போதுவரை கரோனா வைரஸ் தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அரசுகள், மருத்துவத் துறை அலுவலர்கள், ஊடகங்கள் மற்றும் மக்கள் என அனைவரும் கரோனா தொற்றுக்கான அறிகுறிகளை அறிந்துகொண்டு அதற்கு எதிராக போர் தொடுக்க வேண்டும்.
உலக மக்கள் தொகைக்கு பெரும் அச்சுறுத்தலாய் அமைந்த ஸ்பானிஷ் ஃப்ளு ஏற்படுத்திய இழப்புகளை கடந்து நூறாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன, ஆனால் அதன் எதொரொலி இன்னும் வரலாற்று பக்கங்களில் உள்ளது. அதற்கான நோய் எதிர்ப்பு சக்திகளை கண்டறிந்ததும், தொடர் ஆராய்ச்சிகளும் அந்நோய் பரவலை தடுத்து நிறுத்தியது. ஆனால் 2003ஆம் ஆண்டு பரவிய சார்ஸ் வைரசும், 2013ஆம் ஆண்டு பரவிய மத்திய கிழக்கு ஃப்ளுவும் வேறு விதமான அச்சத்தையும் சவால்களையும் நம்மை சந்திக்கச் செய்தன.
கரோனா வைரஸ் தொற்று இதற்கு நேரெதிராக இந்த நூற்றாண்டின் கொடூர கொள்ளைநோயாக உருவெடுத்துள்ளது. பல நாடுகளின் பொருளாதாரம், சமூகம், சுகாதாரம் உள்ளிட்டவைகளை கடுமையாக பாதித்துள்ளது. சீனாவில் கரோனாவால் தொழிற்சாலைகள் மூடப்பட்டதால், அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளே மருத்து உபகரணங்களின் தட்டுப்பாட்டால் தவித்து வருகிறது.
1941ஆம் ஆண்டு பிராங்ளின் டி ரூஸ்வெல்ட் தலைமையிலான அமெரிக்க அரசாங்கம், இதுபோன்ற நெருக்கடி சூழலில் எப்படி நடக்க வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக திகழ்கிறது. அமெரிக்க தொழிற்சாலைகள் இரண்டாம் உலகப்போர் சமயத்தில் கார் தயாரிப்பதை நிறுத்திக்கொண்டு, ஒரு மணிநேரத்தில் 10 அதிவேக போர் ஜெட்டுகளை தயாரித்து அந்நாடு போரில் வெற்றிபெறுவதற்கு ஆயத்தப்படுத்தியது.
இந்த நோய்க்கான பரிசோதனை நுட்பங்களை கண்டறிவதில் இந்தியா பின் தங்கியுள்ளதோ? என்ற அச்சம் எழும் வேளையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் அதனை தனியார் துறையிடம் ஒப்படைக்கலாம் என முடிவு செய்துள்ளது. இந்தியா போன்ற ஒரு நாட்டில் பெரும் உயிரிழப்பு ஏற்படும் முன் மக்களுகு விழிப்புணர்வு ஏற்படுத்துவது மிகவும் அவசியமான ஒன்றாகும்.
கரோனாவை எதிர்த்து போராட 10 நாட்களில் சீனர்கள் 1,000 நோயாளிகளுக்கான மருத்துவமனையை கட்டியது, அதில் மருத்துவர்கள் இரவு பகலாக நோயாளிகளை கவனித்துக் கொண்டது எல்லாம் தன்னலமற்ற சேவைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
கரோனா வைரஸ் தொற்றுக்கு மருந்து கண்டறிய இன்னும் ஒன்றரை ஆண்டுகள் ஆகும் பல்வேறு தரவுகள் கூறுகின்றன. கரோனா வைரசின் வளர்ச்சி இந்தியாவில் மூன்றாம் நிலையை எட்ட இன்னும் இரண்டு வாரங்களே உள்ளன, மொத்த நாடும் ஒன்றிணைந்து கடுமையாக போராட வேண்டிய நேரமிது.
இந்தியாவில் இது மருத்துவ அவசரநிலை காலம். இளைஞர்களையும் கரோனா விட்டுவைக்காது என்ற உலக சுகாதார மையத்தின் எச்சரிக்கையால், மத்திய, மாநில அரசுகள் இணைந்து விரைவாக திட்டம்தீட்டி செயல்படத் தொடங்கின. இந்தியப் பிரதமரால் கரோனா தடுப்பு நடவடிக்கையாக தேசிய அளவு முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தையக சூழலில் ஒவ்வொரு நாட்டு அரசாங்கமும் தங்களது மக்களின் பொருளாதாரத்தையும் சுகாதாரத்தையும் காப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்துவருகிறது. பிரிட்டன் தங்கள் தொழிலாளர்களின் 80 சதவிகித ஊதியத்தை வழங்க முடிவு செய்துள்ளது. பிரான்ஸ் இந்த நெருக்கடி நிலையை சமாளிக்க தங்களது பெரு நிறுவனங்களை தேசியமயமாக்க முடிவுசெய்துள்ளது.
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் மக்களுக்கு தங்களால் இயன்ற சேவையை செய்து வருகின்றனர். ஹைதராபாத்தை சேர்ந்த பெண்கள் இலவசமாக சானிடைசர்கள், முகக் கவசங்கள் தயாரித்து வழங்கியது பாராட்டுக்குரியது. இதுபோன்ற சூழலில், கோழியை பற்றி சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பி, கோழி வியாபாரிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியது கண்டிக்கத்தக்கது.
தொழில்நுட்பத்தின் ஆற்றல், ஊடகங்களின் ஆதரவு, மருத்துவர்களின் சேவை, பொதுமக்களின் சக்தியால் கரோனாவை வென்றெடுப்போம்...