ETV Bharat / bharat

’பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளை தனிமைப்படுத்த வேண்டும்’ - வெங்கையா நாயுடு - பயங்கரவாத எதிர்ப்பு தினம்

டெல்லி:பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளை தனிமைப்படுத்த மற்ற நாடுகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும் என குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

VP Naidu
VP Naidu
author img

By

Published : May 21, 2020, 12:21 PM IST

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி 1991ஆம் ஆண்டு மே 21ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். அவர் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் மே 21ஆம் தேதி பயங்கரவாத எதிர்ப்பு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்நிலையில், பயங்கரவாத எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு ட்விட்டர் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தாய் நாட்டை பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து காப்பாற்ற உயிர்த் தியாகம் செய்த அனைத்து வீரமான மகன்களுக்கும், மகள்களுக்கும் என்னுடைய அஞ்சலியை தெரிவித்துக்கொள்கிறேன்.

பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம் பாதுகாப்புப் படையினருக்கு மட்டும் பொறுப்பல்ல, ஒவ்வொரு குடிமகனின் கடமை ஆகும். பயங்கரவாதம் மனித குலத்தின் எதிரியாகும், உலகளாவிய அமைதிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகும்.

  • On Anti-Terrorism Day, I pay my tributes to all the brave sons and daughters, who sacrificed their lives to safeguard the motherland from the evil of terrorism. #AntiTerrorismDay

    — Vice President of India (@VPSecretariat) May 21, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளை தனிமைப்படுத்த மற்ற நாடுகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும். பயங்கரவாதத்தை எதிர்க்க அனைத்து இந்தியர்களும் எப்போதும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.