ETV Bharat / bharat

தேர்தல் நன்னடத்தை விதிமுறை அமலுக்கு வந்தது: கூடுதல் தலைமை தேர்தல் அலுவலர்

புதுச்சேரி: காமராஜர் நகர் சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் நன்னடத்தை விதிமுறை புதுச்சேரி பிராந்தியம் முழுவதும் இன்று முதல் அமலுக்கு வந்தது என புதுச்சேரி கூடுதல் தலைமை தேர்தல் அலுவலர் குமார் கூறியுள்ளார்.

officer kumar
author img

By

Published : Sep 21, 2019, 10:52 PM IST

இந்திய தேர்தல் ஆணையம் புதுச்சேரி காமராஜர் நகர் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிட்டது. இதனையடுத்து, புதுச்சேரி கூடுதல் தலைமை தேர்தல் அலுவலர் குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், புதுச்சேரி காமராஜர் நகர் சட்டமன்றத் தொகுதிக்கான முதல் மாதிரி நன்னடத்தை நெறி புதுச்சேரி பிராந்தியம் முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. இது தேர்தல் நடைமுறை நிறைவுபெறும் தேதி வரை அமலில் இருக்கும் என்றார். காமராஜர் நகர் சட்டமன்றத் தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 35,325 பேர் வாக்களிக்க உள்ளனர் என்றார்.

கூடுதல் தலைமை தேர்தல் அலுவலர் குமார் செய்தியாளர் சந்திப்பு

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், வாக்காளர் பரிசோதிக்க காகித தணிக்கை இயந்திரம் பயன்படுத்தப்படவுள்ளது. இங்கு 32 வாக்குச்சாவடிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார். தேர்தல் நேர்மையாகவும், அமைதியாகவும் நடத்தி முடிக்க மாதிரி நன்னடத்தை விதிகளை முழுமையாக கடைப்பிடிக்குமாறு, ஒத்துழைப்பு நல்குமாறு தேர்வுத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.

புதுச்சேரியில் தேர்தல் விதிமீறல்களை தடுக்க மூன்று பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் கூடுதல் பறக்கும் படை அமைக்கப்படும் என்றார்.

இதையும் படிங்க: நாங்குநேரி இடைத்தேர்தல்: நெல்லையில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்!

Intro:புதுச்சேரி காமராஜர் நகர் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் நன்னடத்தை விதிமுறை புதுச்சேரி பிராந்தியம் முழுவதும் இன்று முதல் முதல் அமலுக்கு வந்தது புதுச்சேரி கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி குமார் பேட்டி

Body:இந்திய தேர்தல் ஆணையம் புதுச்சேரி காமராஜ் நகர் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிட்டது இதனை அடுத்து புதுச்சேரி கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர் புதுச்சேரி காமராஜ் நகர் சட்டமன்றத் தொகுதிக்கான இன்று முதல் மாதிரி நன்னடத்தை நெறி புதுச்சேரி பிராந்தியம் முழுவதும் அமலுக்கு வந்துள்ளது இது தேர்தல் நடைமுறை நிறைவுபெறும் தேதி வரை அமலில் இருக்கும் என்றார் காமராஜ் நகர் சட்டமன்றத் தொகுதியில் 17225 ஆண்களும் 18 ஆயிரத்து 99 பெண் மூன்றாம் பாலினம் ஒன்று என மொத்த வாக்காளர்கள் 35 ஆயிரத்து 325 பேர் வாக்களிக்க உள்ளனர் என்றார்

மின்னனு வாக்கு பதிவு இயந்திரம் மற்றும் வாக்காளர் பரிசோதிக்க காகித தணிக்கை இயந்திரம் இது பயன்படுத்தப்படவுள்ளது இங்கு 32 வாக்குச்சாவடிகளிலும் மின்னனு வாக்கு பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படும் உள்ளதாக அவர் தெரிவித்தார் தேர்தல் நேர்மையாகவும் அமைதியாகவும் நடத்தி முடிக்க மாதிரி நன்னடத்தை விதிகளை முழுமையாக கடைப்பிடிக்குமாறு ஒத்துழைப்பு நல்குமாறு தேர்வுத் துறை கேட்டுக் கொண்டுள்ளது

புதுச்சேரியில் தேர்தல் விதிமீறல்களை தடுக்க 3 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது தேவைப்பட்டால் கூடுதல பறக்கும் படை அமைக்கப்படும் என்றார்

Conclusion:புதுச்சேரி காமராஜர் நகர் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் நன்னடத்தை விதிமுறை இன்று முதல் அமலுக்கு வந்தது புதுச்சேரி கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி குமார் பேட்டி
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.