கடந்த 2019 மக்களவை தேர்தலில், மும்பை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டவர் நடிகை ஊர்மிளா மடோன்கர். பாஜக வேட்பாளரிடம் அவர் படுதோல்வி அடைந்தார். காங்கிரஸ் கட்சியில் தன்னை ஒதுக்க அரசியல் செய்வதாகக் கூறி அவர் அக்கட்சியிலிருந்து விலகினார். இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல் மும்பை உள்ளதாக நடிகை கங்கனா ரனாவத் கருத்து தெரிவித்தார்.
![ஊர்மிளா மடோன்கர்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/urmila_0112newsroom_1606810303_281.jpg)
தொடர்ந்து, பாஜகவுக்கு ஆதரவான கருத்துகளை தெரிவித்தவந்த கங்கனா ரனாவத்திற்கு ஊர்மிளா தக்க பதிலடி அளித்துவந்தார். இதற்கிடையே, சட்டமேலவை உறுப்பினராக அவரை தேர்ந்தெடுக்க மாநில அமைச்சரவை பரிந்துரை செய்தது. சிவசேனா கட்சியில் அவர் இணையவுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே முன்னிலையில் அவர் தன்னை சிவசேனாவில் இணைத்து கொண்டார். அப்போது, மாநிலங்களவை உறுப்பினர் பிரியங்கா சதுர்வேதி உள்பட பலர் அங்கிருந்தனர்.