ஆம் ஆத்மி கட்சியைச் சோ்ந்த டெல்லி சட்டப்பேரவை உறுப்பினர் மோஹிந்தர் கோயல் மீது பெண் ஒருவா் பாலியல் வன்கொடுமை புகார் அளித்தார்.
இதனைத்தொடர்ந்து, மோஹிந்தர் கோயல் மீது டெல்லி காவல் துறையினர் இந்திய தண்டனைச் சட்ட பிரிவு 376, 506, 509இன் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளார்கள்.
ஓய்வூதியம் தொடா்பாக சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் வந்தபோது கோயல் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், ஒரு மாதம் கழித்து திரும்பவும் தன்னை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் பாதிக்கபட்ட பெண் புகாரில் தெரிவித்துள்ளார்.
2019 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில் இந்த சம்பவம் ஆம் ஆத்மி கட்சிக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.