ஒடிசா மாநிலத்தில் புதிதாக 90 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது 2,478 பேராக வழக்கு உயர்ந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை அலுவலர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ”புதிதாக வைரஸ் உறுதி செய்யப்பட்ட 90 பேர்களில் 79 பேர் ஆங்காங்கே தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களில் இருந்தவர்கள். மீதம் உள்ள 11 பேர் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள். தற்போது குர்தா மாவட்டத்தில் 25 பேருக்கும், கஞ்சம் மாவட்டத்தில் 22 பேருக்கும் அதிகபட்சமாக கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுவரை 1,416 பேர் குணமடைந்துள்ளனர், உறுதி செய்யப்பட்டவர்கள் 1,053 பேர் உள்ளனர். மேலும் கரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஏழு பேராக உள்ளது.

அதேசமயம் கரோனா தொற்று இருந்த இரண்டு பேர் உயிரிழந்தனர். ஆனால் அவர்கள் இத்தொற்றால் இறக்கவில்லை. இதுவரை ஒடிசா மாநிலத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,478 பேராக உள்ளது.
இந்நிலையில் எட்டு மாவட்டங்களில் 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளன. தற்போது 521 வழக்குகளுடன் கஞ்சம் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. மற்ற மாவட்டங்களான ஜஜ்பூர் 290 பேர், குர்தா 195 பேர், பாலசூர் 179 பேர், கேந்திரபாரா 161 பேர், பத்ராக் 132 பேர், கட்டாக் 131 பேர், போலங்கிர் 102 பேர்கள் என அதிகபட்ச வழக்குகள் பதிவாகியுள்ளது” என்றார்.