நாட்டில் கரோனா வைரசின் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் காவல் துறையினர் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தியுள்ளன.
இந்நிலையில், ஒடிசா மாநிலம், மயூர்பஞ்ச் காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றிவரும் மம்தா மிஸ்ரா தனது பேறுகால விடுப்பைத் துறந்து மீண்டும் பணிக்குத் திரும்பியுள்ளார். இவர் தற்போது எட்டு மாத கர்ப்பிணியாகத் தனது அன்றாடப் பணிகளை மேற்கொண்டுவருகிறார்.
நேற்று முன்தினம், ஒடிசா காவல் துறை இயக்குநர் அபே, மாநிலத்தில் நடைபெறும் கரோனா தடுப்புப் பணிகளை ஆய்வுசெய்ய மயூர்பூர் பகுதிக்குச் சென்றபோது பேறுகால விடுப்பைத் துறந்து இவர் பணிசெய்வது தெரியவந்ததாகவும், காவல் துறையினரின் இந்தக் கரோனா தடுப்புப் பணிகளை தான் பாராட்டுவதாகவும், நாடு முழுவதும் அயராது பணியாற்றும் காவலர்களுக்கு மரியாதை செலுத்துவதாகவும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இதையும் படிங்க: இது நமக்கான சிறை அல்ல; நாளைக்கான சுதந்திரம்!