உத்தரப் பிரதேச மாநிலத்தையும் தேசிய தலைநகர் பகுதியான நொய்டாவையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில், 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான கள்ளச்சாராயத்தை லாரி ஒன்று ஏற்றி வந்துகொண்டிருந்தது.
அப்போது அங்கு சோதனையில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் அந்த லாரியை நிறுத்தியுள்ளனர். இதையடுத்து, அந்த லாரியில் இருந்த நபர்கள் பதறி ஓடினர். துரத்திச் சென்ற காவல் துறையினர் அவர்களைப் பிடிக்க முயற்சித்தனர்.
துரத்திவந்த காவல் துறையினரை கள்ளச்சாராயத்தை கடத்திவந்தவர்கள் துப்பாக்கியால் சுட்டனர். காவல் துறை தரப்பிலிருந்தும் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது.
கள்ளச்சாராயத்தை கடத்திவந்த பவன் என்பவர் துப்பாக்கிச் சூட்டின்போது படுகாயமடைந்தார். அவரை அருகில் இருந்த மருத்துவமனையில் காவல் துறையினர் சேர்த்தனர்.
கடத்தலில் ஈடுபட்ட மற்றொரு நபர் தப்பித்துச் சென்றுவிட்டார். அவரைப் பிடிக்க காவல் துறை தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.
லாரியிலிருந்த 700 பெட்டிகளில் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான கள்ளச்சாராயத்தை காவல் துறையினர் பறிமுதல்செய்தனர்.