பிகார் மாநிலம், அகர்தலா பகுதியில் இருந்து முசாஃபர்பூருக்கு சரக்கு லாரியில் கஞ்சா கடத்துவதாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் முசாஃபர்பூர் பகுதியில் இன்று அதிகாலை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியே வந்த சரக்கு லாரி ஒன்றை வழிமறித்து விசாரித்தபோது லாரியில் இருந்த நான்கு பேர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். பின்னர் சரக்கு லாரியை சோதனை செய்தபோது, அதில் மூட்டை மூட்டையாக கஞ்சா கடத்தியது தெரியவந்தது.
சுமார் 550 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் நான்கு பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.