ராஜாஸ்தானில் டோங்க் மாவட்டத்தில் உள்ள கசாய் மொஹல்லா (Kasai Mohalla) பகுதியில் காவல் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கரோனா ஊரடங்கு நேரத்தில் வெளியே சுற்றித்திரிந்த அடையாளம் தெரியாக கும்பலைக் காவல் துறையினர் கண்டிக்க வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில், இருதரப்பினருக்குமிடையே சண்டை ஏற்பட, மூன்று காவலர்களையும் கும்பல் பலமாகத் தாக்கிவிட்டு தப்பியோடியுள்ளது. தற்போது, இவர்கள் மூவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சம்பவத்தில் தொடர்புடைய குற்றாவாளிகளைத் தீவிரமாகத் தேடிவருவதாகத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: மூன்று கட்டங்களாக லாக் டவுன் திறக்கப்படும் - அமெரிக்கா திட்டம்