காஷ்மீரைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் உள்ள பொறியியல் கல்லூரியில் பயின்று வருகின்றனர். இவர்கள் புல்வாமா தாக்குதல் நினைவுத் தினத்தன்று, பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்துகளை பேசி சமூக வலைதளத்தில் வீடியோ பதிவேற்றி இருந்தனர்.
இதுதொடர்பாக காவலர்கள், பொறியியல் மாணவர்கள் மூன்று பேரையும் கைது செய்தனர். இந்நிலையில் அவர்களை எச்சரித்து அன்றைய தினமே காவலர்கள் விடுவித்தனர். இதற்கு இந்துத்துவ அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. குறிப்பாக ஸ்ரீ ராம் சேனா தலைவர் பிரமோத் முத்தாலிக், இவ்விவகாரத்தை கடுமையாக விமர்சித்தார்.
இந்நிலையில் மூன்று மாணவர்களும் இன்று (திங்கட்கிழமை) மீண்டும் தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக இவ்விவகாரம் தொடர்பாக காவல்துறை அமைச்சர் (மாநில உள்துறை) பசவராஜ் பொம்மை காவல் உயரதிகாரிகளிடம் பேசினார் என்பது நினைவுகூரத்தக்கது.
இதையும் படிங்க: தொடரும் தடை..! நீடிக்கும் சோகம்..! சோகத்தில் பள்ளத்தாக்கு மக்கள்..!