ETV Bharat / bharat

உடலை தகனம் செய்ய மறுத்ததால் ஏற்பட்ட வன்முறை! - மேற்குவங்க மாநிலம்

கொல்கத்தா: கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவரின் உடலை அதிகாரிகள் ரகசியமாக அப்புறப்படுத்துவதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்ட கும்பலுக்கும் காவல் துறையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 20க்கும் மேற்பட்ட காவல் துறையினர் காயமடைந்தனர்.

உடலை தகனம் செய்ய மறுத்தால் ஏற்பட்ட வன்முறை!

author img

By

Published : Apr 21, 2020, 1:30 PM IST

நாடு முழுவதும் கரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்த வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 30 நாள்களாக வீட்டிலேயே முடங்கி இருப்பதால் கரோனா குறித்த அச்சம் பொதுமக்களிடையே அதிகரித்துவருகிறது.

கரோனா அறிகுறி உள்ளவர்களைக்கூட தங்களது பகுதிகளில் தனிமைப்படுத்த அனுமதிக்க முடியாது என்று போராட்டம் நடத்தும் மக்களின் எண்ணிக்கையும் இதுபோன்ற செய்திகளும் அதிகளவில் இடம்பெறுகின்றன.

இந்நிலையில், மேற்குவங்க மாநிலம் அலிபுர்தார் மாவட்டத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த ஒருவரின் உடலை அரசு அலுவலர்கள், ரகசியமாக அப்புறப்படுத்துவதாக அப்பகுதி மக்களுக்கு தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து உயிரிழந்தவரை தகனம் செய்ய தீஸ்டா ஆற்றங்கரை சென்ற அலுவலர்களை ஒரு கும்பல் சுற்றிவளைத்தது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், அந்தக் கும்பலுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் பேச்சுவார்த்தை கைகலப்பாகி வன்முறையில் முடிந்தது. இந்த சம்பவத்தில் 20க்கும் மேற்பட்ட காவல் துறையினர் காயமடைந்துள்ளனர்.

மேலும், வன்முறையை கலைக்க காவல் துறையினர் நடத்திய தூப்பாக்கி சூட்டில் இளைஞர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதையும் பார்க்க: கேரளாவில் பாதுகாப்பாக உணர்கிறோம் - இத்தாலியர் பாராட்டு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.