வடக்கு காஷ்மீர் பந்திபோரா மாவட்டத்தில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்புக்கு உதவிய இருவரை ஜம்மு காஷ்மீர் காவல்துறையினர் கைது செய்தனர். இம்மாதிரியான அமைப்புகள் இளைஞர்களை ஈர்க்க நீண்ட நாள்களாகவே முயற்சி செய்துவருவதாக பந்திபோரா மாவட்ட மூத்தக் காவல் கண்காணிப்பாளர் ராகுல் மாலிக் தெரிவித்தார்.
செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர் இதுகுறித்து கூறுகையில், "வடக்கு காஷ்மீர் பகுதியில் ஆயுதம் ஏந்திய குழுக்களில் இளைஞர்களை சேர்க்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுவருவதாக காவல்துறையினருக்கு நீண்டகாலமாக தகவல் கொடுக்கப்பட்டுவந்தது.
ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்புக்கு உதவிய அப்துல் மஜீத் கானை கைது செய்துள்ளோம். அவரிடம் விசாரணை மேற்கொண்ட பிறகு, சவுகத் அகமது கைது செய்யப்பட்டார். நீண்ட காலமாகவே, ஜெய்ஷ்-இ-முகமது அமைப்புக்கு அப்துல் மஜீத் கான் உதவி செய்துவருகிறார்.
பயங்கரவாத அமைப்புக்கு இருவரும் ஆயுதங்கள் வழங்கிவருகின்றனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்" என்றார்.