காஷ்மீரின் ஸ்ரீநகர் அருகே வசித்து வரும் யாஸ்மீனா என்ற 11 வயது சிறுமி, பாம்பு கடித்ததால் அங்குள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். மிகவும் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு மருத்துவமனை நிர்வாகம் தீவிரமாக சிகிச்சை வழங்கியது.
![பி சி நம்பியார்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4357637_nam.jpg)
அதன் பலனாக அந்த சிறுமி உயிர் பிழைத்தார். இதையடுத்து, மூன்று நாட்கள் கண்காணிப்புக்கு பின்னர், அவரை மருத்துவமனையிலிருந்து வெளியேற்றலாம் என அம்மருத்துவமனை அலுவலர் பி.சி. நம்பியார் கூறினார்.