மேற்கு வங்கத்தின் தென் பகுதியில் அமைந்துள்ள பங்குரா, புர்பா பர்தாமன், ஹவுரா உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று (ஜூலை 27) கனமழை பெய்தது. இந்த மழையின்போது, மின்னல் தாக்கியதில் 11 பேர் உயிரிழந்தனர். அதில் பன்குரா மற்றும் புர்பா பர்தாமன் மாவட்டங்களில் மொத்தமாக 5 பேரும், ஹவுராவில் ஒருவரும் உயிரிழந்தனர். ஒண்டா மற்றும் கஞ்சல்கதி பகுதியில் மூன்று பேரும் உயிரிழந்தனர்.
துப்ராஜத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள விவசாய நிலத்தில் வேலை செய்து வந்த பெண் ஒருவர் உயிரிழந்தார். அதேபோல் இந்த மின்னல் தாக்குதலில் குளத்தில் குளித்துக்கொண்டிருந்த நான்கு பேர் காயமடைந்துள்ளனர். இவர்கள் அனைவருக்கும் மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே மேற்கு வங்கத்தில் உள்ள தென் மாவட்டங்களில் இன்றும் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் டாஸ்மாக் இயங்க தடையில்லை - உச்ச நீதிமன்றம்