மத்திய பிரதேச மாநிலத்தின் சிவ்புரி மாவட்டம் தோந்திரிகலா கிராமத்தைச் சேர்ந்த 40 பேர், மொரவன் என்னும் பகுதியில் நடந்த துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, பிக்கப் வாகனத்தில் சென்று விட்டு வீடு திரும்பினர்.
அந்த பிக்கப் வாகனம், கக்ரா கிராமத்தின் அருகே வந்து கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், படுகாயமடைந்த 24 பேரை மீட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: இருசக்கர வாகன விபத்து... தூக்கி வீசப்பட்ட இருசக்கரவாகன ஓட்டி... வெளியானது சிசிடிவி