புதுச்சேரி காவல்துறையினர் நேற்றிரவு கடலூர் - புதுச்சேரி சாலை அருகே ரோந்துp பணியில் ஈடுபட்டனர். அப்போது இளைஞர் ஒருவர் சந்தேகப்படும்படி தனியார் வளாகம் அருகே நின்று கொண்டிருந்தார். இதனைக்கண்ட காவல்துறையினர் அவரை இடைமறித்து விசாரணை நடத்தியதில், முன்னுக்குப்பின் முரணாக பேசியுள்ளார்.
அவரது பெயர் தெய்வநாயகம் என்றும், புதுச்சேரி முருங்கபாக்கம் பகுதியில் வசித்து வருவதும் தெரியவந்தது. இதனையடுத்து அவரது பைக்கை சோதனை செய்ததில் சுமார் 600 கிராம் கஞ்சா இருந்துள்ளது. இதனைத்தொடர்ந்து அவரை காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில், அவர் விற்பனைக்காக வைத்திருந்த 1.5 கிலோ கஞ்சாவையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
திண்டுக்கல்லில் 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், அந்த இளைஞருக்கு கஞ்சா சப்ளை செய்த திருவண்ணாமலையை சேர்ந்த சீனுவாசன், சுரேஷ் ஆகியோர் புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்தில் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், மூன்று பேரையும் கைது செய்த உருளையன் பேட்டை காவல்துறையினர் அவர்களிடமிருந்த 1.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பத்து கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.