பெங்களூரு: தன் மீது பாலியல் ஆர்வம் இல்லாத கணவர் ஓரினச்சேர்க்கையாளர் (gay) என்று கூறி, அவர் மீதும் அவரது பெற்றோர் மீதும் பெங்களூரு ஞானபாரதி காவல் நிலையத்தில் மனைவி புகார் அளித்துள்ளார். பெங்களூருவில் தம்பதிகளுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆன நிலையில் கணவருக்கு உடலுறவில் ஆர்வம் இல்லாமல் இருந்து வந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த மனைவி தன் கணவரில் செல்போனை எடுத்து சோதனை செய்துள்ளார்.
அப்போது அவர் ஓரினச்சேர்க்கையாளர் (gay) என்பது தெரிய வந்துள்ளது. இந்த உண்மையை மறைத்து கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் ஏமாற்றி திருமணம் செய்துள்ளதாக மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் அவர் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதாகவும், சில ஆண்டுகளுக்கு முன் இளைஞன் ஒருவரை வரதட்சணை கொடுத்து திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
முறைப்படி திருமணம் செய்துகொண்டபோதும், கணவர் இவருடன் பாலியல் உறவு கொள்ள மறுத்து வந்ததாக தெரிகிறது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகும், உடலுறவு கொள்வதில் ஆர்வம் காட்டப்படவில்லை. இதற்கிடையில், அவரது கணவரின் சகோதரருக்கு திருமணமாகி ஒரு குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பெற்றுக் கொள்வது குறித்து பலமுறை இருவரும் விவாதித்தும், பல காரணங்களை கூறி தவிர்த்து வந்ததாக மனைவி புகாரில் தெரிவித்துள்ளார்.
கணவரின் நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த அவர், அவரது செல்போனில் மெசேஞ்சரை சோதித்து பார்த்துள்ளார். அப்போது அவர் இருக்க வேண்டிய இடத்தில் வேறொரு நபர் இருப்பதை கண்டு மனைவி அதிர்ச்சியடைந்துள்ளார். மெசஞ்சரில் கணவரும் மற்றொரு நபரும் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்த புகைப்படங்கள் மற்றும் பாலியல் தொடர்பான புகைப்படங்களை மனைவி பார்த்துள்ளார்.
இதுகுறித்து அவரது மனைவி கேட்டபோது, அவரின் பெயரை எழுதி வைத்து தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் கணவரின் பெற்றோரிடம் கூறியபோது, ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு குடும்பம் நடத்துங்கள் என கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மனைவி மகனைப் பற்றித் தெரிந்திருந்தும், 160 கிராம் தங்க நகை மற்றும் ரொக்கத்தைப் பெற்றுக் கொண்டு பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்துள்ளனர் என அந்தப் பெண் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
தனது மகனின் ஓரினச்சேர்க்கையை மறைத்து திருமணம் செய்ததாக கணவர் மற்றும் அவரது பெற்றோர் மீது ஞானபாரதி காவல் நிலையத்தில் பெண் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மோசடி குற்றச்சாட்டின் பேரில் போலீசார் எப்ஐஆர் பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: மக்கள் பணிகளை செய்ய விடாமல் திமுகவினர் மிரட்டல்? - இந்திய முஸ்லிம் லீக் புகார்!