ETV Bharat / bharat

பெங்களுருவில் ஜி20 ஆற்றல் மாற்ற பணிக்குழு கூட்டம்

இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்தின் கீழ் பெங்களூருவில் ஆற்றல் மாற்ற பணிக்குழு கூட்டம் பிப்ரவரி 5 முதல் 7 வரை நடக்கிறது.

author img

By

Published : Jan 30, 2023, 1:41 PM IST

பெங்களுருவில் ஜி20 ஆற்றல் மாற்ற பணிக்குழு கூட்டம்
பெங்களுருவில் ஜி20 ஆற்றல் மாற்ற பணிக்குழு கூட்டம்

பெங்களூரு: இந்தியாவின் தலைமைத்துவத்தின் கீழ் ஜி20 அமைப்பின் முதலாவது ஆற்றல் மாற்ற பணிக் குழு கூட்டம் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பிப்ரவரி 5 முதல் 7 வரை நடைபெறகிறது. வங்க தேசம், எகிப்து, மொரீஷியஸ், நெதர்லாந்து, நைஜீரியா, ஓமன், சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம், ஸ்பெயின் ஆகிய 9 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.

இவர்களுடன் உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி, ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம், சர்வதேச எரிசக்தி முகமை, ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டம், சர்வதேச சூரிய ஒளிசக்தி கூட்டமைப்பு, ஐக்கிய நாடுகள் சர்வதேச மேம்பாட்டு நிறுவனம், ஆசியா மற்றும் பசிபிக் பகுதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் பொருளாதாரம் மற்றும் சமூக ஆணையம் உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்களின் மூத்த அலுவலர்களும் கலந்துகொள்ள உள்ளனர்.

தொழில்நுட்ப இடைவெளிகளைக் குறைப்பதன் வாயிலாக எரிசக்தி மாற்றம், எரிசக்தி மாற்றத்திற்கு குறைந்த நிதி செலவு, எரிசக்தி பாதுகாப்பு மற்றும் பன்முகப்படுத்தப்பட்ட விநியோக சங்கிலிகள், எரிசக்தி செயல் திறன், தொழில்துறையில் குறைந்த கார்பனை நோக்கிய மாற்றங்கள் மற்றும் பொறுப்பான பயன்பாடு, எதிர்காலத்திற்கான எரிபொருட்கள், தூய எரிசக்திக்கான உலகளாவிய அணுகுமுறை மற்றும் நியாயமான, மலிவான விலையில் உள்ளடக்கிய எரிசக்தி மாற்றத்திற்கான வழிகள் ஆகிய ஆறு துறைகள் குறித்த ஆலோசனை நடத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்த கூட்டத்தின்போது கரியமில வாயு வெளியேற்றம் இல்லாத நிலையை உருவாக்க கார்பன் பயன்பாடு, தடுப்பு மற்றும் சேமிப்பு தொடர்பாக ர்வதேச கருத்தரங்கு நடைபெறும். புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சிகள் மற்றும் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் பற்றி தெரிந்து கொள்வதற்காக, இன்ஃபோசிஸ் பசுமை கட்டிட வளாகம் மற்றும் பவகடா சூரிய ஒளிசக்தி பூங்காவையும் பிரதிநிதிகள் நேரில் சென்று பார்வையிடுவார்கள்.

இதையும் படிங்க: செயற்கை நுண்ணறிவு சேவைகளில் வாடிக்கையாளருக்கு நாட்டமில்லை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.