கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் நகர துறைமுகப் பகுதியில், போதை பொருள் தடுப்புப் பிரிவினர் நேற்று (ஆகஸ்ட். 15) சோதனையில் ஈடுபட்டனர். இந்தச் சோதனையில், ரூ. 55 கோடி மதிபுள்ள போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுதொடர்பாக, மால்டா மாவட்டத்தைச் சேர்ந்த போதை பொருள் விற்பனையாளரும், மணிப்பூரைச் சேர்ந்த விற்பனையாளரும் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கசோல் பகுதியில் மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
முதல்கட்ட தகவலில் பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருளில், ஹெராயின் 10.06 கிலோ, போதை மாத்திரைகள் 2.29 கிலோ என மொத்தம் 12.35 கிலோ இருந்தது என்பதும், இவற்றின் மதிப்பு ரூ. 55 கோடி என்பதும் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: 700 கிலோ போதைப் பொருட்கள் தீயில் போட்டு எரிப்பு