ETV Bharat / bharat

அரிய நோயால் தவித்த வங்கதேச குழந்தைக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை - எய்ம்ஸ் சாதனை - Giant Occipital Encephalocele

அரிய வகை பிறவி நோயால் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடிய வங்கதேசத்தைச் சேர்ந்த 3 மாத பெண் குழந்தைக்கு தலையில் அறுவை சிகிச்சை செய்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் காப்பாற்றினர்.

குழந்தை
குழந்தை
author img

By

Published : Dec 19, 2022, 9:57 PM IST

டெல்லி: வங்கதேசத்தைச் சேர்ந்தவர், அபித் ஆசாத். இவரது மூன்று மாத பெண் குழந்தைக்கு "ஜெயன்ட் ஆக்ஸிபிடல் என்செபலோசெல்" என்ற அரிய வகை பிறவி நோய்ப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வகையான நோய் பாதித்தவர்களின் நரம்பு மண்டலம், சீரான வகையில் இல்லாமல், மூளைப் பகுதி மற்றும் மண்டை ஓடு சராசரி அளவைக் காட்டிலும் பெரிதாகவும் கட்டி போன்று வளர்ந்தும் காணப்படும் எனக் கூறப்படுகிறது.

இது பிறவி நோய் என்றும்; நோய்ப் பாதித்தவர்களுக்கு குறிப்பிட்ட நாட்களுக்குள் சீரிய முறையில் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், கட்டி உடைந்து உயிருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

3 மாத பெண் குழந்தையை காப்பாற்ற நாடு நாடாக சுற்றிய பெற்றோர், இறுதியில் இந்தியாவிற்கு சிகிச்சைக்காக வந்தனர். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க முயன்ற நிலையில், மருத்துவச் செலவு உள்ளிட்ட காரணங்களால் குழந்தையை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பெற்றோர் அனுமதித்தனர்.

அறுவை சிகிச்சை மூலம் குழந்தையின் தலையில் இருந்த கட்டியை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றினர். பூரண சிகிச்சை பெற்று குழந்தை உடல்நிலை நன்றாக இருப்பதாகவும், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: டிவிட்டரில் இருந்து எலான் மஸ்க் விலகல்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.