ETV Bharat / bharat

சர்ச்சைக்குரிய "லேயர் ஷாட்" விளம்பரத்திற்கு தடை! - வாசனை திரவியத்தின் விளம்பரத்திற்கு மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் தடை

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறையை தூண்டும் வகையில் ஒளிபரப்பப்பட்ட "லேயர் ஷாட்" வாசனை திரவியத்தின் விளம்பரத்திற்கு மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது.

Ministry
Ministry
author img

By

Published : Jun 5, 2022, 6:20 AM IST

டெல்லி: "லேயர் ஷாட்" எனப்படும் வாசனை திரவியம் தயாரிப்பு நிறுவனம், ஆபாசமான இரட்டை அர்த்தங்கள் கொண்ட விளம்பரம் ஒன்றை தயாரித்து, தொலைக்காட்சிகள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியிட்டிருந்தது. இதற்குப் பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த விளம்பரத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று டெல்லி பெண்கள் நல ஆணையம் வலியுறுத்தியிருந்தது. இந்த விளம்பரம் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்முறையையும், ஆண்களிடையே வன்புணர்வு மனநிலையையும் தூண்டும் வகையில் உள்ளது என்றும், இதனை தொலைக்காட்சி, சமூக வலைதளங்கள் உள்ளிட்ட வெகுஜன ஊடகங்களில் ஒளிபரப்ப தடை விதிக்க வேண்டும் என்றும் டெல்லி பெண்கள் நல ஆணையம் வலியுறுத்தியிருந்தது.

இது தொடர்பாக மத்திய அரசுக்கு டெல்லி பெண்கள் நல ஆணையம் கடிதமும் எழுதியிருந்தது. இந்நிலையில் சர்ச்சையை ஏற்படுத்திய "லேயர் சாட்" நிறுவனத்தின் விளம்பரங்களை ஒளிபரப்ப மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது. ட்விட்டர், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களும் இந்த விளம்பரத்தை ஒளிபரப்ப கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க: ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் கணவன், மனைவி நீதிபதிகளாக நியமனம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.