கொல்கத்தா (மேற்கு வங்கம்): “கரோனா தொற்று மாதிரிகளின் மரபணு வரிசை முறையானது, இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து மேற்கு வங்கத்தில் பிஏ2 மாதிரிக்கு பதிலாக, ஒமைக்ரான் துணை வகைகளான பிஏ4 மற்றும் பிஏ5 வகைகள் தொடங்கியுள்ளன” என சுகாதாரத்துறையின் மூத்த அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி, “இதுபெரும்பாலும் துணை வேறுபாடான பிஏ5 ஆகும். இது பிஏ2 மாதிரிகளை ஒத்து காணப்படுகிறது. இதுதான் மாநிலத்தின் (மேற்குவங்கம்) சமீபத்திய கரோனா வைரஸ் தொற்றுகளின் அதிகரிப்புக்கு காரணம். நாங்கள் மேற்கு வங்கத்தில் நேர்மறையான மாதிரிகளில் மரபணு வரிசை சோதனையை நடத்தி வருகிறோம்” எனத் தெரிவித்தனர்.
மேலும், “ஒமைக்ரானின் சில துணை வகைகளான பிஏ4 மற்றும் பிஏ5 ஆகியவையே பெரும்பாலும் காணப்பட்டன. ஆனால் கவலைப்பட அவசியமில்லை. பிஏ துணை மாறுபாடுகள் பெருமளவிலான தொற்றுநோயாக இருந்தாலும், குறைந்த பட்சம் வேறு நோய்கள் இல்லாதவர்களுக்கும் அச்சுறுத்தலாக இல்லை" என்று சுகாதார சேவைகளின் இயக்குநர் சித்தார்த்த நியோகி தெரிவித்தார்.
தொடர்ந்து, கல்யாணி பகுதியில் உள்ள தேசிய உயிரி - மருத்துவ மரபியல் நிறுவனத்திற்கு அனுப்பப்பட்ட பெரும்பாலான கரோனா மாதிரிகளில், சில பிஏ4 உடனும், சில பிஏ5 உடனும் ஒத்துக் காணப்பட்டு, பாசிட்டிவ் தரவுகளை மட்டுமே அளித்தன. இதுகுறித்து பெலியாகாட்டா ஐ.டி மற்றும் பி.ஜி மருத்துவமனையின் நுண்ணுயிரியல் துறையின் இணைப் பேராசிரியர் கேயா முகர்ஜி கூறுகையில், “மேற்கு வங்கத்தில் சமீபத்திய கரோனா தொற்றின் அதிகரிப்புக்கு ஒமைக்ரான் துணை மாறுபாடு பிஏ5 தான் காரணம்.
பிஏ5 மாறுபாட்டின் நோய்த்தொற்று விகிதம், அதன் முன்னோடியான பிஏ2-ஐ விட மிக அதிகமாக இருப்பதால், அடுத்த சில வாரங்களில் மேற்கு வங்கம் அதிகப்படியான பாசிட்டிவ்களை உருவாக்கும். பெரும்பாலான மக்கள் தடுப்பூசி போடுகிறார்கள். தொற்று லேசானதாக இருக்கும் மற்றும் இறப்பு விகிதமும் குறைவாக இருக்கும்.
வரும் நாட்களில் தொற்று அதிகரிக்கும். கரோனா தொற்று குறைவதற்கு முன்பு உச்சத்தை எட்டக்கூடும். மாநிலத்தில் தொற்று வெறும் ஐந்து நாட்களில் கிட்டத்தட்ட இரட்டிப்பாகிவிட்டது. மேலும் ஒரு நாளில் பல ஆயிரக்கணக்கான நோய்த்தொற்றுகள் இருக்கும் என்பதை இது காட்டுகிறது. இது ஒரு கட்டத்தில் உச்சத்தை அடைந்து பின்னர் குறையத் தொடங்கும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மார்பக புற்றுநோய்: ஆரம்ப நிலையில் கண்டறியும் “ஈஸிசெக் பிரெஸ்ட்” அறிமுகம்