முன்னாள் பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பதிவில், 'உண்மையான பிராமணனுக்கு யாரும் தொல்லை கொடுக்க கூடாது; துரோகம் இழைக்கக்கூடாது’ எனக் கூறியுள்ளார். ஆனால் இதை தான் மத்திய அமைச்சர் அமித் ஷாவின் ஆலோசகரான குருமூர்த்தி போன்ற போலியான பிராமணருக்கு குறிப்பிடவில்லை எனவும்; பிராமணன் என்றால் அறிவார்ந்த நபராகவும், துணிச்சல் கொண்ட நபராகவும் இருக்க வேண்டும்.
அவர் ( குருமூர்த்தி ) அப்படிப்பட்ட நபர் அல்ல எனவும் சாடியுள்ளார். மேலும் குருமூர்த்தி, தமிழ் பிராமணர்கள் பெரும்பாலானோருக்கு உண்மையான பிராமணருக்கான குணங்கள் இல்லை எனவும் சுப்பிரமணிய சுவாமி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க : மத மோதல் குறித்து அச்சமின்றி பேசிய சாய் பல்லவி... சமூக வலைதளங்களில் புயலைக் கிளப்பிய விவாதம்