ETV Bharat / bharat

லடாக்கில் ராணுவ வாகனம் விபத்து; 9 பேர் உயிரிழப்பு - பாதுகாப்புத்துறை அமைச்சர் வருத்தம்! - பாதுகாப்புத்துறை அமைச்சர்

Army vehicle accident in Ladakh: லடாக்கில் ராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Aug 19, 2023, 10:20 PM IST

லடாக்: தெற்கு லடாக்கின் நியோமாவில் உள்ள கியாரி என்ற பகுதிக்கு அருகே 10 பேருடன் சென்ற ராணுவ வாகனம் எதிர்பாராத விதமாக பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகி உள்ளது. இது தொடர்பாக லே (Leh) மூத்த காவல் கண்காணிப்பாளர் பி டி நித்யா கூறுகையில், “லே பகுதியில் இருந்து நியோமாவுக்கு 10 பேரை ஏற்றிக் கொண்டு ராணுவ வாகனம் ஒன்று வந்து உள்ளது.

அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், இன்று (ஆகஸ்ட் 19) மாலை 4.45 மணியளவில் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல் துறையினர், விபத்தில் காயம் அடைந்தவர்களை ராணுவ மருத்துவ மையத்துக்கு அழைத்து வந்தனர். முதலில் 8 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டனர். பின்னர், ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஒருவர் இக்கட்டான நிலையில் படுகாயங்கள் உடன் சிகிச்சை பெற்று வருகிறார்” என தெரிவித்தார்.

  • Saddened by the loss of Indian Army personnel due to an accident near Leh in Ladakh. We will never forget their exemplary service to our nation. My thoughts are with the bereaved families. The injured personnel have been rushed to the Field Hospital. Praying for their speedy…

    — Rajnath Singh (@rajnathsingh) August 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்த நிலையில், இது தொடர்பாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது ‘X' வலைதள பக்கத்தில், “லடாக்கில் லே அருகே நடந்த விபத்தில் இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தது வருத்தம் அளிக்கிறது. நமது நாட்டிற்கு அவர்களின் முன்மாதிரியான சேவையை நாம் ஒருபோதும் மறக்க மாட்டோம். என் எண்ணங்கள் உயிரிழந்த வீரர்களின் குடும்பங்கள் உடன் உள்ளன. காயம் அடைந்த வீரர்கள் ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். அவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: பிகார் பத்திரிகையாளர் சுட்டுக் கொலை; 4 பேர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.