ETV Bharat / bharat

Karnataka Politics: தோல்வியடைந்தாலும் சிதராத பாஜகவின் வாக்கு வங்கி.. காங்கிரஸுக்கு காத்திருக்கும் அடுத்த சவால்!

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில், காங்கிரஸ் கட்சி 135 இடங்களி வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தாலும், பாஜக தனது வாக்கு வங்கியை துளியும் சிதற விடாமல் இருப்பது காங்கிரஸ் கட்சிக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. குறித்து அலசுகிறது இந்த தொகுப்பு..

சிதறாத பாஜகவின் வாக்கு வங்கி.. காங்கிரஸுக்கு காத்திருக்கும் அடுத்த சவால்

author img

By

Published : May 14, 2023, 12:09 PM IST

ஹைதராபாத்: கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 224 தொகுதிகளில், காங்கிரஸ் -135, பாஜக -66, மதச்சார்பற்ற ஜனதா தளம்-19, சுயேட்சைகள்-2, கல்யாண ராஜ்ய பிரகதி பாக்சா மற்றும் சர்வோதயா கர்நாடகா பாக்‌ஷா ஆகிய கட்சிகள் தலா 1 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.

காங்கிரஸ் கட்சியின் வெற்றியை தொடர்ந்து தென்னிந்திய மக்கள் மதவாத சக்தியை முற்றிலும் அகற்றிவிட்டனர் என பாஜக எதிர்ப்பு மனநிலையில் உள்ளவர்கள் மற்றும் தேசிய அளவில் காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்கள் போட்டு கொண்டாடி வருகின்றனர். ஆனால் அரசியல் நோக்கர்கள் காங்கிரஸ் வெற்றி பெற்றாலும் கர்நாடக தேர்தல் முடிவை கவனமாக அணுக வேண்டும் என கருத்து கூறி வருகின்றனர். அதற்கான காரணம் 66 இடங்களில் மட்டும் வென்றிருந்தாலும் பாஜக பெற்ற வாக்கு சதவீதம் தான்.

வாக்கு சதவீதத்தில் மாஸ் காட்டிய பாஜக: இந்த தேர்தலின் சில புள்ளி விவரங்கள் பாஜகவுக்கு ஆறுதலையும், காங்கிரஸுக்கு சவாலையும் கொடுத்துள்ளது என்றுதான் கூற வேண்டும். ஏனென்றால், தற்போதைய தேர்தல் நிலவரப்படி, காங்கிரஸ் 42.88 சதவீதம், பாஜக 36 சதவீதம், மதச்சார்பற்ற ஜனதா தளம் (ஜேடிஎஸ்) 13.29 சதவீதம், நோட்டா 0.69 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளன.

இந்த புள்ளி விவரங்கள் அனைத்தும் இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. அதேநேரம், கடந்த 2018ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக 104 இடங்களைக் கைப்பற்றிய நிலையில் 36.35 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தது. ஆனால், தோல்வி அடைந்த காங்கிரஸ் 80 இடங்கள் உடன் 38.14 சதவீத வாக்குகளையும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 37 இடங்கள் உடன் 18.3 சதவீத வாக்குகளையும் பெற்றிருந்தன. இதனைப் பார்க்கும்போது, முந்தைய சட்டப்பேரவை தேர்தலில் பெற்ற வாக்கு வங்கியில் பாஜக மிகவும் சொற்ப வித்தியாசமே தென்படுகிறது.

அதேபோல், காங்கிரஸ் பெற்ற 4.74 சதவீத கூடுதல் வாக்குகள், மதச்சார்பற்ற ஜனதா தளத்தில் இருந்து பிரிக்கப்பட்ட வாக்காகவே கருதப்படுகிறது. ஏனென்றால், பாஜகவின் வாக்கு வங்கியும், அதன் வேட்பாளர்கள் வெற்றி பெற்ற இடங்களும் தொடர்ந்து பாஜகவுக்கு ஆதரவாகவே தெரிகிறது. குறிப்பாக, கர்நாடகாவின் கடலோரப் பகுதிகள் மற்றும் மெட்ரோ நகரமான பெங்களூருவில் பாஜக தனது ஆதிக்கத்தை வலுவாக செலுத்துவது புலப்படுகிறது.

என் தலைவன் முகம் எங்க பிராண்ட்: அதேநேரம், ஜேடிஎஸ் ஆதிக்கம் செலுத்திய சில தொகுதிகளை காங்கிரஸ் மொத்தமாக கைப்பற்றி உள்ளதும் தெரிய வருகிறது. இதன் மூலம் பாஜக தனது வாக்கு வங்கியை தக்க வைத்திருப்பது தெளிவாகத் தெரிய வருகிறது. இருப்பினும், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கையாண்ட குறிப்பிட்ட தொகுதிகளில் கணிசமான வெற்றியை மட்டுமே பாஜக பெற்றிருப்பதால், பாஜகவின் கவனம் அந்த குறிப்பிட்ட தொகுதியில் உள்ள நிர்வாகிகளின் செயல்பாடுகள் மீது விழுந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், தற்போது காங்கிரஸ் அடைந்திருக்கும் வெற்றி என்பது 2024 மக்களவைத் தேர்தலின் வெற்றிக்கான அடித்தளம் என காங்கிரஸ் கட்சியினர் வரையறுக்கும் நிலையில், பாஜகவின் வாக்கு வங்கி காங்கிரஸ் முன் நிற்கும் பெரும் சவாலாக அமைந்துள்ளது.

அதேபோல், பெண்கள் மற்றும் விவசாயிகளை இலக்காக வைத்து காங்கிரஸ் வெளியிட்ட வாக்குறுதிகளும், அக்கட்சியின் அறுதிப் பெரும்பான்மை வெற்றிக்கு காரணமாக அமைந்திருக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இருப்பினும், ‘என் தலைவன் முகம் எங்க பிராண்ட்’ என பிரதமர் மோடி பிரச்சாரம் மேற்கொண்டது கர்நாடக மக்களிடம் பலிக்கவில்லை எனவும் காங்கிரஸ் கட்சியினர் கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில், வரவிருக்கும் 2024 மக்களவை தேர்தலுக்கான பணியில், தற்போதைய ஆட்சி பீடத்தை அலங்கரிக்கும் காங்கிரஸ் முழுவதுமாக ஈடுபட்டு, வாக்குறுதிகளை நிறைவேற்றும் பணியிலும், ஆட்சி நிர்வாகத்திலும் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே காங்கிரஸ் கட்சிக்கு பலமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. மேலும், கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் கர்நாடகவில் 25 இடங்களை பாஜக கைப்பற்றியது. காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் தலா 1 இடத்தை மட்டுமே கைப்பற்றியதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கர்நாடகாவில் எடுபடாத அண்ணாமலையின் வியூகம்.. காரணம் என்ன..?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.