ETV Bharat / bharat

இந்தூர் மருத்துவமனையில் 18 குழந்தைகள் உயிரிழப்பு? கலப்பட பால் காரணமா? - இந்தூர்

மத்திய பிரதேச மருத்துவமனையில் 8 நாட்கள் இடைவெளியில் 18 குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்ததாக தகவல் பரவி வருகிறது. மருத்துவமனையில் வழங்கப்பட்ட கலப்பட பால் காரணமாக 18 குழந்தைகள் உயிரிழந்ததாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.

Dead
Dead
author img

By

Published : Jul 6, 2023, 9:44 PM IST

இந்தூர் : மத்திய பிரதேசத்தில் உள்ள மருத்துவமனையில் ஏழு முதல் எட்டு நாட்கள் இடைவெளியில் அடுத்தடுத்து கண்காணிப்பில் வைக்கப்பட்டு இருந்த 18 குழந்தைகள் உயிரிழந்ததாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் மகாராஜா துகோஜிராவ் ஹோல்கர் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் கண்காணிப்பில் வைக்கப்பட்டு இருந்த 18 குழந்தைகள் 7 முதல் 8 நாட்கள் இடைவெளியில் அடுத்தடுத்து உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வந்த கலப்பட பால் தான் குழந்தைகளின் உயிரிழப்புக்கு காரணம் என சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.

இந்நிலையில், இந்த குற்றச்சாட்டை மருத்துவமனை நிர்வாகம் முற்றிலும் மறுத்து உள்ளது. இது குறித்து மருத்துவர் சுனில் ஆர்யா, மருத்துவமனையில் 18 குழந்தைகள் இறந்ததாக பரவி வரும் தகவல் முற்றிலும் பொய் என்று தெரிவித்தார். மாறாக இரண்டு குழந்தைகள் மட்டுமே உயிரிழந்ததக அவர் தெரிவித்து உள்ளார்.

அதிலும், பிறந்து 5 நாட்களே ஆன குழந்தை ஒன்றுக்கு செப்சிஸ் பாதிப்பு இருந்ததாக மருத்துவர் தெரிவித்தார். செப்சிஸ் என்பது மிகவும் தீவிரத்தன்மை வாயந்த நோய்த் தொற்று என்று கூறப்படுகிறது. இது உயிருக்கு ஆபத்தான மருத்துவ அவசரநிலை என்றும் இந்த தொற்று பெரும்பாலும் நுரையீரல், சிறுநீர் பாதை, தோல் அல்லது இரைப்பை குழாயின் மூலம் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

செப்சிஸ் பாதிப்பு காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு பிறந்து 5 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை உயிரிழந்ததாக மருத்துவர் தெரிவித்தார். அதேபோல் மற்றொரு பச்சிளம் குழந்தை நிமோனியா பாதிப்பால் அவதிப்பட்டு வந்ததாகவும், வெளி மருத்துவமனையில் இருந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் வென்டிலேட்டரில் வைத்து தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாக மருத்துவர் கூறினார்.

எடைக் குறைவு, நிமோனியா தீவிரம் உள்ளிட்ட காரணங்களால் சிகிச்சை பலனளிக்காமல் அந்த குழந்தையும் இறந்ததாக மருத்துவர் தெரிவித்து உள்ளார். 18 குழந்தைகள் இறந்ததாக சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல் போலியானது என்றும் அடிப்படை உண்மைத் தன்மையற்றது என்றும் மருத்துவர் கூறினார்.

இது தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்த இந்தூர் துணை காவல் ஆணையர் வி.எஸ் சர்மா, மருத்துவமனை நிர்வாகம் இரண்டு குழந்தைகள் இறந்தது குறித்த தகவலை அளித்து உள்ளதாக கூறினார். ஒரு குழந்தை நிமோனியாவால் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், மற்றொரு குழந்தை குறைப்பிரசவத்தில் பிறந்து பலவீனமாக இருந்ததாகவும் மருத்துமனை நிர்வாகம் தெரிவித்ததாக கூறினார். இரண்டு குழந்தைகளின் சடலத்தையும் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து உள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க : திருமணத்திற்கு மறுத்ததால் ஆத்திரம்... உயிருடன் இந்திய மாணவியை புதைத்த காதலன்.. அதிர்ச்சி பின்னணி!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.