ETV Bharat / bharat

2024 தேர்தலில் பாஜகவை வீழ்த்தப்போவது எப்படி? - அமெரிக்காவில் வியூகத்தை உடைத்த ராகுல்காந்தி! - மக்களவை தேர்தல் 2024

மக்களவை தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பாஜகவை தோற்கடிக்கும் என்றும், தங்களது செயல்பாடுகள் மக்களை வியப்படையச் செய்யும் என்றும் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது இதனை தெரிவித்தார்.

Rahul
ராகுல்காந்தி
author img

By

Published : Jun 2, 2023, 1:11 PM IST

வாஷிங்டன்: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி பத்து நாட்கள் சுற்றுப்பயணமாக கடந்த 30ஆம் தேதி அமெரிக்கா சென்றார். நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்ட பிறகு முதல்முறையாக சாதாரண இந்தியராக ராகுல்காந்தி அமெரிக்கா சென்றுள்ளார்.

கடந்த 30ஆம் தேதி அன்று, சான்பிரான்சிஸ்கோ நகரில் அமெரிக்க வாழ் இந்தியர்களை சந்தித்துப் பேசினார். அப்போது பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தார். பிரதமர் மோடிக்கு எல்லாம் தெரியும் என்று நினைக்கிறார் என்றும், கடவுளையே குழப்பிவிடுவார் என்றும் விமர்சித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து நேற்று முன்தினம், கலிஃபோர்னியாவில் உள்ள புகழ்பெற்ற ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் இந்திய மாணவர்கள் மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கல்வியாளர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, இந்தியாவில் ஜனநாயகத்தைக் காப்பாற்ற எதிர்க்கட்சிகள் போராடி வருவதாகவும், மக்களும் அரசியல் கட்சியினரும் அச்சுறுத்தப்படுகிறார்கள் என்றும் கூறியிருந்தார்.

அமெரிக்காவில் இந்தியாவையும் பிரதமர் மோடியையும் அவமதிக்கும் வகையில் ராகுல்காந்தி பேசியதாக பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். எல்லா வெளிநாட்டுப் பயணங்களிலும் ராகுல்காந்தி நாட்டை அவமதிக்கும் வகையிலேயே பேசுகிறார் என்றும் குற்றம் சாட்டியிருந்தனர்.

இதையும் படிங்க: எம்.பி தகுதி நீக்கத்தை சிறப்பான வாய்ப்பாக பார்க்கிறேன்: ஸ்டான்போர்டு பல்கலையில் மனம் திறந்த ராகுல்காந்தி!

இந்த நிலையில், ராகுல்காந்தி நேற்று(ஜூன் 1) வாஷிங்டன் நகருக்கு சென்றார். அங்கு, அமெரிக்க பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேசினார். பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு ராகுல்காந்தி பதிலளித்தார்.

அப்போது 2024 மக்களவை தேர்தல் குறித்து பேசிய ராகுல்காந்தி, "வரும் மக்களவை தேர்தலில் நாங்கள் சிறப்பாக செயல்படுவோம். எங்களது செயல்பாடுகள் மக்களை ஆச்சரியப்படுத்தும் என்று நினைக்கிறேன். எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பாஜகவை தோற்கடிக்கும். இப்போது எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து வருகின்றன. நாங்கள் அனைத்து எதிர்க்கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர்," அரசியல் கட்சியினருடன் இந்த பேச்சுவார்த்தையில் திருப்தி ஏற்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் எதிர்க்கட்சிகளுடனும் போட்டியிடும் நிலை ஏற்படும் என்பதால், அது தொடர்பாகவும் விரிவாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். சில இடங்களில் சமரசங்கள் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படலாம். இந்த தேர்தலில் மாபெரும் எதிர்க்கட்சிக் கூட்டணி அமையும் என்ற நம்பிக்கை இருக்கிறது. மத்திய பாஜக அரசு ஏஜென்சிகளை கையில் வைத்துக் கொண்டு எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தி வருகிறது" என்று கூறினார்.

எம்பி பதவி தகுதி நீக்கம் குறித்து பேசிய ராகுல்காந்தி, "என்னை நாடாறுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்தது எனக்கு நன்மைதான். அது என்னையும் எனது செயல்பாடுகளையும் முழுவதுமாக மறுவரையறை செய்ய வாய்ப்பளித்துள்ளது. தகுதிநீக்கம் மூலம் அவர்கள் எனக்கு பரிசு கொடுத்திருக்கிறார்கள் என்றே நினைக்கிறேன். அது அவர்களுக்கு இப்போது புரியவிலை, விரைவில் புரியும்" என்று கூறினார்.

இதையும் படிங்க: Rahul Gandhi: "பிரதமர் மோடி கடவுளுக்கே வகுப்பு எடுப்பார்" - அமெரிக்காவில் ராகுல் காந்தி விமர்சனம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.