ETV Bharat / bharat

Radhika Merchant Arangetram: களைகட்டிய மும்பை, அம்பானி மருமகள் பரதநாட்டிய அரங்கேற்றம்!

அம்பானியின் வருங்கால மருமகளான ராதிகா மெர்சன்டின் பரதநாட்டிய அரங்கேற்றம் பிரமாண்டமான முறையில் மும்பையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு, ராதிகாவை வாழ்த்தினர்.

Arangetram
Arangetram
author img

By

Published : Jun 6, 2022, 7:51 AM IST

Updated : Jun 6, 2022, 3:29 PM IST

மும்பை: செழுமையான கலை மற்றும் கலாசாரம் மும்பையின் முக்கிய அங்கம் என்றாலும், கரோனா தொற்றுநோய் சிறிது காலத்திற்கு நகரத்தை அதன் சாயலில் இருந்து மறைத்து விட்டது. அது மெல்ல மெல்ல உயிர் பெறத் தொடங்கும் வேளையில், நகரத்தில் அம்பானி நடத்திய ஒரு நிகழ்வு நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது.

அது அம்பானியின் வருங்கால மருமகளான ராதிகா மெர்சன்டின் பரதநாட்டிய அரங்கேற்றம் ஆகும். ராதிகா மெர்சன்ட், பிரபல தொழிலதிபர் முகேஷ்- நீடா அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் வருங்கால மனைவி ஆவார். ஞாயிற்றுக்கிழமை (ஜூன்5) நடைபெற்ற இந்நிகழ்ச்சியை அம்பானி தொகுத்து வழங்கினார். இது நகரம் மீண்டும் கலாசார நிகழ்வுக்குள் செல்ல வழிவகுத்தது.

களைகட்டிய மும்பை, அம்பானி மருமகள் பரதநாட்டிய அரங்கேற்றம்!

ராதிகா மெர்சன்ட்: இந்த பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்வு மும்பை பிகேசியில் உள்ள பிரமாண்ட ஜியோ வேர்ல்டு சென்டரில் நடந்தது. இதில் பல முக்கிய தலைவர்கள், தொழிலதிபர்கள் நண்பர்கள் என பலரும் கலந்துகொண்டு ராதிகா மெர்சன்டை வாழ்த்தி, ஊக்கம் அளித்தனர்.

இந்நிகழ்வில், பெரும்பாலான விருந்தினர்கள் ப்ரோகேட் செய்யப்பட்ட மற்றும் எம்ப்ராய்டரி செய்யப்பட்ட பட்டுப் புடவைகள் மற்றும் விரிவான ஷெர்வானி மற்றும் குர்தாக்களுடன் தங்களின் பாரம்பரியமிக்க சிறந்த ஆடைகளுடன் வந்திருந்தனர்.

Ambanis host 'Arangetram' of son's fiance Radhika Merchant in a dazzling event
ராதிகா மெர்சன்ட்

8 ஆண்டுகால நாட்டிய பயிற்சி: இது நிகழ்வுக்கு பிரமாண்டத்தையும் நேர்த்தியையும் சேர்த்தது. மறுபுறம், அம்பானி குடும்பத்தினரும், வணிகர்களும் ஒவ்வொரு விருந்தினருக்கும் தனிப்பட்ட வரவேற்பை வழங்குவதை உறுதி செய்தனர். இந்த விருந்தில், அனைத்து கோவிட் நெறிமுறைகளும் மிகக் கண்டிப்பாகப் பின்பற்றப்பட்டன.

இந்நிகழ்வுக்கு முன் வெப்ப பரிசோதனை உள்ளிட்ட விரிவான கோவிட் சோதனைகள் செய்யப்பட்டன. இதனை அனைவரின் பாதுகாப்பு மற்றும் நல்ஆரோக்கியத்தின் நலன் கருதி விருந்தினர்கள் உடனடியாக ஒப்புக்கொண்டனர். ராதிகா கடந்த 8 ஆண்டுகளாக பரத நாட்டியம் கற்றுகொண்டுவருகிறார்.

ராதிகா மெர்சன்ட் நாட்டியம்

பரதநாட்டிய அரங்கேற்றம்: இந்நிலையில் இந்த அரங்கேற்றம் நிகழ்ச்சி ராதிகாவின் குரு பாவனா தாக்கருக்கும் மனநிறைவான ஒரு மகிழ் தருணத்தை அளித்தது. பொதுவாக அரங்கேற்றம் என்பது ஒரு தனிப்பட்ட மேடை நிகழ்ச்சி. இது கலை வடிவத்தின் அரிதான உலகில் ஒரு புதிய கலைஞரின் நுழைவைக் குறிக்கிறது.

எனவே இது ஒரு கலைஞரின் வாழ்க்கையின் மிக முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இது அதன் பாரம்பரியத்தின் தொடர்ச்சியையும், குரு-சிஷ்ய பரம்பரையின் நடன வடிவத்தையும் முக்கியமாகக் குறிக்கிறது. இந்த அரங்கேற்ற நிகழ்ச்சியின்போது, அனைத்து பாரம்பரிய கூறுகளையும் கொண்ட ராதிகாவின் நடனம், பாவனை அங்கிருந்தவர்களை வெகுவாக கவர்ந்தது.

ராதிகா மெர்சன்ட் பரதம்

ராகமாலிகா, புஷ்பாஞ்சலி: மேலும் நிகழ்வில், குரு மற்றும் பார்வையாளர்களின் ஆசீர்வாதத்தை வேண்டி புஷ்பாஞ்சலி தொடங்கி, கணேஷ் வந்தனா மற்றும் பாரம்பரிய அலரிப்பு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்றுன. மேலும், இந்நிகழ்ச்சியின் வெற்றிக்காக பிரார்த்தனைகள், பாரம்பரிய ராகங்கள் மற்றும் ஆதிதாளத்தின் தாளத்திற்கு அழைப்புகள் அமைக்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து பிரபலமான பஜனான 'அச்யுதம் கேசவம்' ராகமாலிகா ராகத்தில் மூன்று கதைகளுடன் அமைக்கப்பட்டது. இது, ஷப்ரியின் ராமருக்கான ஏக்கம், கிருஷ்ணர் கோபியர்களுடன் நடனம் மற்றும் தாய் யசோதா மற்றும் குழந்தை கிருஷ்ணரின் கதை ஆகியன ஆகும். மேலும், சிவன் பஞ்சாக்ஷரத்தின் சக்திவாய்ந்த விளக்கக்காட்சி பஜனைத் தொடர்ந்து நடராஜரின் நித்திய நடனத்தை சித்தரித்தது.

சூரிய கதிர்களுக்கு இடையே ராதிகா மெர்சன்ட் நாட்டியாஞ்சலி

அஸ்தராசா என்னும் 8 உணர்ச்சிகள்: ராதிகா பின்னர் சிக்கலான 'அஸ்தராசா' எனப்படும் நாட்டிய சாஸ்திரங்களில் விவரிக்கப்பட்டுள்ளபடி ஒரு மனிதனுக்கு உள்ளார்ந்த எட்டு அடிப்படை உணர்ச்சிகளை நாட்டியங்களாக நிகழ்த்தினார். அதில், சிருங்கார் (காதல்), ஹாஸ்யா (சிரிப்பு), கருணா (துக்கம்), பய (பயம்), வீர (வீரம்), ரௌத்ரா (கோபம்), பிபித்சா (வெறுப்பு) மற்றும் அத்பூதா (ஆச்சரியம்) ஆகியவை அடங்கும்.

ராதிகாவின் வெளிப்பாடுகள் மற்றும் நடன முத்திரைகள் மூலம் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் திறன் கண்களுக்கு விருந்தளித்தன. மேலும், நாட்டிய தில்லானாவின் உச்சகட்டமாக இருந்தது. தொடர்ந்து, சிக்கலான கால் மற்றும் கை அசைவுகள் மற்றும் சிலை போன்ற தோரணைகள் கொண்ட நடனம் ஆடினார். நிகழ்ச்சியின் முடிவில் அவர் நீண்ட மற்றும் சப்தத்துடன் கூடிய நீண்ட கைதட்டலைப் பெற்றார்.

அம்பானி வருங்கால மருமகள் ராதிகா மெர்சன்ட் பரதநாட்டிய அரங்கேற்றம்

அம்பானி குடும்பத்தில் இரண்டாம் பெண்: இதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. ஏனெனில் அவரின் நடன அசைவுகள் அவ்வாறு நேர்த்தியாக இருந்தன. ராதிகா மெர்சன்ட் நீதா அம்பானிக்குப் பிறகு அம்பானி குடும்பத்தில் பரதநாட்டியத்தின் இரண்டாவது ஆதரவாளராக இருப்பார். நீடா அம்பானி ஒரு பரதநாட்டிய நடனக் கலைஞராக முறைப்படி பயிற்சி பெற்றவர்.

காதலின் நாயகன் கண்ணன் சிலையருகில் ராதிகா மெர்சன்ட் நடனம்

அவரது மிகப்பெரிய தேசிய மற்றும் சர்வதேச பொறுப்புகள் இருந்தபோதிலும் நீடா பரதநாட்டியத்தை தொடர்கிறார். ராதிகா பரதநாட்டிய நிகழ்ச்சியில், 'அஸ்தராசா' எனப்படும் நாட்டிய சாஸ்திரங்களில் விவரிக்கப்பட்டுள்ளபடி ஒரு மனிதனுக்கு உள்ளார்ந்த எட்டு அடிப்படை உணர்ச்சிகளை நாட்டியங்களாக நிகழ்த்தியது பார்வையாளர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டது.

இதையும் படிங்க: திருவள்ளூரில் மார்கழி உற்சவம் - பிரமாண்ட பரதநாட்டிய விழா

Last Updated : Jun 6, 2022, 3:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.