கரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு, பரவலின் தீவிரத்தைப் பொறுத்து படிப்படியாகத் தளர்வு அளிக்கப்பட்டது. மத வழிபாட்டுத் தலங்களைத் திறக்க மத்திய அரசு அனுமதியளித்திருந்த போதிலும் ஒருசில மாநிலங்கள் பக்தர்களுக்கு அனுமதி மறுத்துவந்தன.
குறிப்பாக, நாட்டிலேயே கரோனா பரவல் அதிகமாக இருந்த மகாராஷ்டிர மாநிலத்தில் தீபாவளி பண்டிகைக்குக்கூட பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
ஹோலி, ரம்ஜான், நவராத்திரி போன்ற பண்டிகைகளை மக்கள் வீட்டிலிருந்தபடியே கொண்டாடினர். இச்சூழலில், வரும் திங்கள்கிழமையிலிருந்து (நவ. 16) முறையான பாதுகாப்பு நெறிமுறைகளோடு பக்தர்கள் மத வழிபாட்டுத் தலங்களில் அனுமதிக்கப்படுவார்கள் என மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.
மகாராஷ்டிர அரசின் இந்த முடிவுக்கு பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.