டெல்லி: கரோனா பரவல் காரணமாக பெட்ரோலியம், ரசாயனப் பொருட்கள் போன்ற பல துறைகள் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளன. இந்நிலையில் கரோனா பரவல் காலத்திலும், வேளாண் பொருட்கள் ஏற்றுமதி, மருந்துகள் ஏற்றுமதி அதிகரித்துள்ளதாக வர்த்தகத் துறை செயலாளர் அனுப் வதவன் தெரிவித்துள்ளார்.
பிஹெச்டி வர்த்தக, தொழில் நிறுவனங்களின் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், " சில தொழில் துறைகள் கரோனா காலத்திலும் நல்ல முன்னேற்றத்தை கண்டுள்ளன. அதிலும் குறிப்பாக வேளாண், மருந்துகள் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. இந்த ஏற்றம் இனி வரும் காலத்திலும் தொடர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
புதிய வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்
அதேபோல் கரோனாவால் பின்னடைவை சந்தித்த சில துறைகள் இன்னும் மீண்டு வரவில்லை. எனவே அத்துறைகள் மீது கவனம் செலுத்தி, கரோனாவுக்கு முந்தைய காலத்தில் இருந்தது போன்ற நிலைக்கு கொண்டு வர வேண்டும். அதேபோல் புதிய வாய்ப்புகளை உருவாக்க வேண்டிய தருணத்தில் நாம் இருக்கிறோம்" என்றார்.
முன்னதாக இந்தியாவின் ஏற்றுமதி விகிதம் கடந்த நவம்பர் மாதத்தில் 8.74 விழுக்காடாக சரிந்து, 23.52 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. பெட்ரோலியம், பொறியியல், ரசாயனப் பொருட்கள், ஆபரணங்கள் ஆகிய துறைகளால், ஏற்றுமதி விகிதம் சரிந்தது.
இதையும் படிங்க: நவம்பர் மாதத்தில் ஏற்றுமதி 8.74 விழுக்காடு சரிவு