ஹைதராபாத்: பாலிவுட்டின் பிக் பி(Big B) என்று அழைக்கப்படும் அமிதாப் பச்சன் தனது 80 வயதிலும் இளம் நடிகர்களுக்குப் போட்டியாகத் திரைப்படங்கள், விளம்பர படங்கள் மற்றும் ரியாலிட்டி ஷோ என எப்போதும் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில், தெலுங்கு பிரபலம் பிரபாஸ் நடிப்பில் பான் இந்தியா படமாக உருவாகும் 'புரொஜெக்ட் கே' என்ற படத்தில் அமித்தா பச்சன் நடித்து வருகிறார்.
இப்படத்திற்கான படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. படத்தின் சண்டைக் காட்சிக்கா ஷூட்டிங்கின் போது எதிர்பாராதவிதமாக நடிகர் அமிதாப் விபத்தில் சிக்கினார். இதில் அவரது விலா எலும்பு பகுதியில் முறிவு ஏற்பட்டது. பின்னர், படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு அவர் ஹைதராபாத்தில் உள்ள பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்தால் 'புரொஜெக்ட் கே' படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அமிதாப் உடல்நிலை சீராக உள்ளதாகவும், சமூக வலைத்தளங்களில் வெளியாகும் வீண் வதந்திகள் அடங்கிய தகவல்களை அவரது ரசிகர்கள் நம்ப வேண்டாம் என குடும்பத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர். அமிதாப் திரை வரலாற்றில் 1983-ஆம் ஆண்டு வெளிவந்த கூலி திரைப்படத்தின் போது படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டு அவரது காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நூலிழையில் உயிர் தப்பிய ஏஆர் ரகுமானின் மகன்.! என்ன நடந்தது.?