ETV Bharat / bharat

ஸ்மார்ட்போன், மின்சாரம் இல்லாத அதிசய கிராமம்.. இயற்கையோடு ஒன்றி வாழும் மக்கள்!

நவீன தொழில்நுட்பங்கள் மனிதனின் இயல்பு வாழ்க்கையை மிக எளிதாக மாற்றி வரும் நிலையில் ஆந்திர பிரதேசத்தில் மின்சாரம், ஸ்மார்ட் போன் உள்பட எந்த வசதிகளும் இல்லாமல் ஒரு கிராமம் இயங்கி வருவது காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.

கிராமம்
கிராமம்
author img

By

Published : Dec 17, 2022, 10:00 PM IST

ஸ்ரீகாகுளம்: நவீன தொழில்நுட்பங்கள் மனிதனின் வாழ்க்கை முறையை மாற்றி எளிதாக்கி வருகின்றன. ஸ்மார்ட்போன், கேட்ஜெட்டுகள் தற்போதைய மனித வாழ்வியலின் அங்கமாக உருவெடுத்துள்ளன.

21ஆம் நூற்றாண்டில் மின்சாரம், ஸ்மார்ட்போன் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் இல்லாமல் மனிதர்களின் அன்றாட வாழ்க்கை நகராது. ஆனால் அதற்கு விதிவிலக்காக ஆந்திரா மாநிலத்தில் ஒரு கிராமம் உள்ளது.

ஸ்மார்ட்போன், மின்சாரம் என எந்த வசதிகளும் இல்லாமல் அந்த கிராம மக்கள் இயற்கையோடு ஒன்றி வாழ்ந்து வருகின்றனர். ஆந்திரப் பிரதேச மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ளது குர்மா என்கிற கிராம் தான் அது.

இரும்பு, சிமெண்ட் உள்ளிட்ட பொருட்கள் இல்லாமல் மண் சுவரால் வீடுகள் கட்டமைக்கப்பட்டு மின்சாரமின்றி கற்கால மனிதர்களைப் போல் குர்மா கிராம மக்கள் வாழ்ந்து வருகின்றனர். கிராமத்திற்குத் தேவையான காய்கறி, உள்ளிட்ட பொருட்களை தாங்களே விளைவித்தும் பக்கத்து நகர மக்களுக்கும் தங்களுக்கும் தொடர்பே இல்லாதது போல் நாட்டிற்கே அப்பாற்பட்ட கிராமமாக குர்மா மக்கள் உள்ளனர்.

அதேநேரம் கல்வி உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளில் கவனம் செலுத்தும் கிராமவாசிகள், பாடசாலை அமைத்து அனைத்து குழந்தைகளுக்கும் கல்வியை இலவசமாக வழங்கி வருகின்றனர்.

இதையும் படிங்க: 9 ஆண்டுகால சேவை.. நாய்களுக்கு கேக் வெட்டி பிரியா விடை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.