ETV Bharat / bharat

108 வகையில் புதுமாப்பிள்ளைக்கு தடபுடல் விருந்து! - Royal Lunch for new married couple

திருமணம் முடிந்து மறுவீட்டுக்கு வந்த புதுமாப்பிள்ளைக்கு தெகிட்ட தெகிட்ட 108 வகையில் உணவு பதார்த்தங்கள் செய்து மாமியார் வீட்டார் விருந்து படைத்துள்ளனர்.

தடபுடல் விருந்து
தடபுடல் விருந்து
author img

By

Published : Feb 2, 2023, 1:22 PM IST

108 வகையில் புதுமாப்பிள்ளைக்கு தடபுடல் விருந்து

ஆந்திரா: நெல்லூர் மாவட்டம் பொடலகூர் கிராமத்தில் மறுவீட்டுக்கு வந்த மாப்பிள்ளைக்கு 108 வகையில் வாய் ருசிக்க மாமியார் விருந்து வைத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகம் பேரால் பகிரப்பட்டு வருகிறது. பிவிநகர் பகுதியைச் சேர்ந்த இம்மாடிஷெட்டி சிவகுமாருக்கும், ஸ்ரீவானி என்ற பெண்ணுக்கும் அண்மையில் திருமணம் நடைபெற்றுள்ளது.

திருமணம் முடிந்த கையோடு புதுமாப்பிள்ளை சிவகுமார், மாமியார் வீட்டில் மறுவீட்டு விருந்துக்கு வந்துள்ளார். பெண்ணை கட்டிக் கொடுத்து அசத்தியது மட்டும் போதாது கருதிய பெண் வீட்டார். மாப்பிள்ளையை விருந்திலும் அசத்தத் திட்டமிட்டுள்ளனர். அதன் விளைவு, மறுவீட்டு விருந்துக்கு வந்த மாப்பிள்ளைக்கு 108 வகையில் விதவிதமான பதார்த்தங்கள் தயார் செய்யப்பட்டன.

தனி மேஜையில் வாழை இழைகள் விரிக்கப்பட்டு கிண்ணங்களில் 108 வகை உணவுகள் புது மண தம்பதிக்கு அளிக்கப்பட்டன. சிக்கன், மட்டன், மீன், இறால், சைவ வகைகள், பழரசம், சாம்பார், தயிர், இனிப்பு மற்றும் பிரியாணிவகைகள் என புதுமாப்பிள்ளை மூக்கின் மீது விரல் வைக்கும் அளவுக்கு மணப்பெண் வீட்டார் விழுந்து விழுந்து கவனித்து உள்ளனர். மறுவீட்டு விருந்து தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், பயங்கர வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: அதானி குழுமம் மீதான முதலிடுகளை வெளியிட வங்கிகளுக்கு ஆர்பிஐ உத்தரவு - தகவல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.