ETV Bharat / bharat

சத்தீஸ்கர் நக்சல் எதிர்ப்பு படைக்கு 9 திருநங்கைகள் தேர்வு

சத்தீஸ்கரில் பாஸ்டர் ஃபைட்டர்ஸ் என்றழைக்கப்படும் நக்சல் எதிர்ப்பு படைக்கு 9 திருநங்கைகள் தேர்வாகியுள்ளனர்.

சத்தீஸ்கர் நக்சல் எதிர்ப்பு படைக்கு 9 திருநங்கைகள் தேர்வு
சத்தீஸ்கர் நக்சல் எதிர்ப்பு படைக்கு 9 திருநங்கைகள் தேர்வு
author img

By

Published : Aug 16, 2022, 8:11 AM IST

ராய்ப்பூர்: பயங்கரவாத நக்சல் குழுக்களை ஒடுக்க 'பாஸ்டர் ஃபைட்டர்ஸ்' என்னும் காவலர்கள் அடங்கிய படையை சத்தீஸ்கர் அரசு அமைத்துள்ளது. இந்த படையினர் நக்சல் அதிகமாக இருக்கும் பகுதிகளில் பணியமர்த்தப்பட்டு, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது மட்டுமல்லாமல் பயங்கரவாத செயல்களை தடுப்பதிலும் முக்கிய பங்கு வகிப்பார்கள்.

இந்நிலையில், பாஸ்டர் ஃபைட்டர்ஸ் படை பிரிவினருக்கான இறுதித்தேர்வு முடிவுகள் நேற்று (ஆக. 15) வெளியானது. இதில், உடற்தகுதி தேர்வு, எழுதுத்தேர்வு ஆகியவற்றை வெற்றிகரமாக முடித்து 9 திருநங்கைகள் பாஸ்ட் பைட்டர்ஸ் படைக்கு தேர்வாகியுள்ளனர். மாநிலம் முழுவதும் மொத்தம் 13 திருநங்கைகள் காவலராக பணியாற்றும் நிலையில், அதில் 9 பேர் பாஸ்டர் ஃபைட்டர்ஸ் படைக்கு தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது திருநங்களை சமூகத்தினரை மட்டுமின்றி பல்வேறு தரப்பினரையும் மகிழ்ச்சிக்குள்ளாகியுள்ளது. இந்த தேர்வில் வெற்றியடைந்த திவ்யா, தாமினி, சந்தியா சானு, குயின், ஹிமான்ஷி, ரியா, சீமா, பார்கா உள்ளிட்ட 9 திருநங்கைகளும் விரைவில் நகஸல்கள் அதிகம் உள்ள பகுதிகளில் பணியமர்த்தப்பட உள்ளனர்.

இதுகுறித்து பாஸ்டர் ஃபைட்டர்ஸ் படைக்கு தேர்வான திவ்யா கூறும்போது,"இன்று நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். எனது உணர்ச்சியை வெளிப்படுத்த வார்த்தையே இல்லை. நானும், எனது நண்பர்களும் இந்த தேர்வுக்காக கடினமாக உழைத்தோம். இது எங்களின் வாழ்க்கையை மாற்றக்கூடிய ஓர் அருமையான வாய்ப்பாக அமைந்தது. இதற்காக தான் நாங்கள் அனைவரும் கடுமையாக உழைத்தோம்" என்றார்.

மேலும், ஜகதல்பூர் மாவட்டத்தில் இருந்து தேர்வாகிய பார்கா கூறும்போது,"தற்போது வரை இதை என்னால் நம்பமுடியவில்லை. மதிப்பும், மரியாதையும் மிக்க ஒரு வேலை எனக்கு கிடைக்கும் என நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை" என்றார். மேலும், பாஸ்டர் ஃபைட்டர்ஸ் படைக்கு தேர்வான திருநங்கைகள் மாநில உள்துறை அமைச்சருக்கும், சத்தீஸ்கர் காவல் துறைக்கும், பாஸ்டர் ஃபைட்டர்ஸ் படைக்கும் தங்களின் நன்றியை தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: காஷ்மீரில் இருவேறு இடங்களில் தாக்குதல்... போலீஸ் உள்ளிட்ட 2 பேர் காயம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.