ETV Bharat / bharat

ஜாமினில் வெளி வந்த குற்றவாளிக்கு வரவேற்பு அளித்த 83 பேர் கைது! - Delhi crime news

டெல்லியில் ஜாமினில் வெளிவந்த குற்றவாளிக்கு வரவேற்பு அளிக்க வந்தவர்களால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டது தொடர்பாக 83 பேரை காவல்துறையினர் கைது செய்யப்பட்டனர்.

ஜாமினில் வெளிவந்த குற்றவாளிக்கு வரவேற்பு அளித்த 83 பேர் அதிரடியாக கைது!

author img

By

Published : Jun 18, 2022, 2:28 PM IST

புதுடெல்லி: துக்ளகாபாத் விரிவாக்கத்தில் வசிப்பவர் அபித் அகமது (37). இவர் மீது தொடரப்பட்ட வழக்கில் இருந்து ஜாமீன் வழங்கப்பட்டது. இதனால், நேற்று (ஜூன் 17) திகார் சிறையில் இருந்து அபித் அகமது விடுவிக்கப்பட்டார்.

இதனைத்தொடர்ந்து டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில், அபித் அகமதுவின் கூட்டாளிகள் மற்றும் பல்வேறு குற்றவாளிகள் அவரை வரவேற்பதாகவும், அணிவகுப்பு நிகழ்ச்சியை நடத்துவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, கிர்பி அரண்மனைக்கு அருகில் மறியலில் ஈடுபட்டவர்கள் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். மேலும் அவர்களிடமிருந்த 19 நான்கு சக்கர வாகனங்கள், இரண்டு இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 83 பேர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 33 பேர், கொலை, கொலை முயற்சி, கொள்ளை, ஆயுதச் சட்டம் போன்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் என காவல்துறை துணை ஆணையர் (தென்மேற்கு) மனோஜ் சி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஜாலியன்வாலாபாக் படுகொலைக்காக வருந்துகிறோம் - பிரிட்டிஷ் அதிகாரி வருத்தம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.